ads
X-மென் டார்க் பீனிக்ஸ்: திரை விமர்சனம்
புருசோத்தமன் (Author) Published Date : Jun 06, 2019 18:34 ISTபொழுதுபோக்கு
மார்வெல் ஸ்டுடியோஸ்
இதே வருடம் வெளியாகும் மார்வெலின் இரண்டாவது திரைப்படம் "X-மென் டார்க் பீனிக்ஸ்" X-MEN: DARK PHOENIX . இந்த வருடத்தில் வெளியான "அவென்ஜர்ஸ் எண்ட்கேம்" (Avengers End Game) திரைப்படம் மிகுந்த எதிர்பார்பில் வெளியானது, வசூலையும் குவித்தது ஆனால் ரசிகர்களை கவரவில்லை. இதன் தாக்கமே X-மென் டார்க் பீனிக்ஸ் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று குறைவாகத்தான் இருந்தது.புதன் கிழமை வெளியானது
X-மென் டார்க் பீனிக்ஸ் படம், இந்தியா மற்றும் சில நாடுகளில் நேற்றே 05-June-2019 வெளியானது. பொதுவாக வெள்ளிக்கிழமை வெளியானால் வார கடைசி என்பதால் கூட்டம் வரும், ஆனால் மற்ற நாடுகளில் வெளியாகும் காரணத்தினால் இந்தியாவில் புதன் கிழமையே வெளியானது. முன்பே வெளிநாட்டில் வெளியானால் திருட்டு பதிவு இணையத்தில் வெளியாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் வெளியிட்டுஉள்ளனர். மற்றும் வரும் வெள்ளிக்கிழமை சில படங்கள் வெளியாவதால், திரையரங்கு கிடைக்காமல் போகும் என்பதால் முன்பே வெளியிட்டுள்ளனர்.எளிய திரைக்கதை
படத்தின் கதை மிக எளிமையான கதை, எந்த ஒரு குழப்பமும் இல்லாத திரைக்கதை. எக்ஸ்-மென் படத்தின் முந்தய பாகங்களை பார்க்காமல் இருக்கும் மக்களுக்கும் இந்த பாகம் தெளிவாக புரியும். இந்த பாகம் முந்தய பாகத்தின் தொடர்ச்சி இல்லை என்பதால், முதல் முறை எக்ஸ்-மென் படத்தை பார்ப்பவர்களுக்கு இந்த பாகம் பிடிக்கும். இதன் முந்தய பாகம் "எக்ஸ்-மென் அபோகாலிப்ஸ்" X-Men: Apocalypse 2016 ஆண்டு வெளியானது, மாபெரும் வசூலை குவித்தது. இந்த பாகத்தில் எதிரியை வீழ்த்த X-மென் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து சண்டையிடும் படமாக இருந்தது.X-மென் டார்க் பீனிக்ஸ் படம் விமர்சனம்
இந்த X-மென் டார்க் பீனிக்ஸ் பாகத்தில் ஜீன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைத்துள்ளனர். பூமியில் வாழும் மனிதர்கள் ம்யூட்டண்ட் " Mutant " வகை ஆட்களை வெறுக்கிறார்கள். ம்யூட்டண்ட் இனத்தை சேர்ந்தவர்களால் மனிதர்களுக்கு ஆபத்து வரும் என அதிகாரிகள் கூறுவதால், ம்யூட்டண்ட் இனத்தை காப்பாற்றவும், மனிதர்களிடமிருந்து நம்பிக்கையை பெற சார்லஸ் (ம்யூட்டண்ட்களுக்காக பள்ளி நடத்துபவர்) மனிதர்களுக்கு ஆபத்து வரும் நேரங்களில் உதவி செய்து நம்பிக்கையை பெறுகிறார். இதனால் மனிதர்கள் ம்யூட்டண்ட் இனத்தவர்களை சூப்பர் ஹீரோக்களாக நினைக்க தொடங்குகிறார்கள்.விண்வெளியில் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர. இவர்களை காப்பாற்ற அமெரிக்க அதிபர் சார்லெசிடம் உதவி கேட்கிறார். விண்வெளியில் உள்ள மனிதர்களை காப்பாற்ற X-மென் குழுவில் உள்ள சிறந்தவர்களை அனுப்புகிறார். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஜீன் கதாபாத்திரம் விபத்தில் சிக்க நேரிடுகிறது, பின் அனைவரும் பூமிக்கு வருகின்றனர். இந்த விபத்தில் ஜீனிற்கு அளவுகடந்த சக்தி கிடைக்கிறது. இந்த சக்தியை கட்டுப்படுத்த முயலும் போது, மற்றவர்களை காயப்படுத்துகிறாள்.
இந்த போராட்டத்தில் தங்களது குழுவில் உள்ள ஒரு முக்கிய நபரையும் இழக்க நேரிடுகிறது. விபத்திற்கு காரணமான சக்தியை அடைய வேற்று கிரகத்தினர் ஜீனை எக்ஸ்-மென் குழுவிற்கு எதிராக திருப்பி பெரும் சண்டை உருவாகின்றனர், இதில் மனிதர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த சண்டை யாருக்கு சாதகமாக முடிந்தது மற்றும், மனிதர்கள் மீண்டும் ம்யூட்டண்ட் இனத்தவர்களை நம்ப தொடங்குவார்களா என்பது இறுதி முடிவு.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதை மிக வேகமாக செல்கிறது, சண்டை காட்சிகளில் சுவாரசியங்கள் குறையவில்லை. தெளிவான திரை கதை என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் பட கதை செல்கிறது. இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகி உள்ளது. நல்ல திரையரங்குகளில் பார்த்தால் சவுண்ட் மற்றும் 3டி தொழில் நுட்பத்தை நன்றாக உணரலாம்.
வரும் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், திரையரங்கு நிரம்ப வாய்ப்பு அதிகம் உள்ளது. எனினும் இந்த வாரம் விஜய் ஆன்டனி நடிப்பில் கொலைகாரன் படம் வெளியாவதால்,காட்சிகள் குறையவும் வாய்ப்புள்ளது. படத்தை, குழந்தைகளுடன் பார்க்கலாம்.