X-மென் டார்க் பீனிக்ஸ்: அவென்ஜர்ஸ் தோல்வியை ஈடுகட்ட வருகிறது
X-மென் டார்க் பீனிக்ஸ்: கடந்த மாதம் வெளியான "அவென்ஜர்ஸ் எண்ட்கேம்" (Avengers End Game) திரைப்படம் மிகுந்த எதிர்பார்புடன் வெளியானது. எதிர்பார்பை பூர்திசெய்ததா என்பதை விட, ரிலீசுக்கு முன்னே முன்பதிவில் பெரிய
வசூல் சாதனை செய்தது. காரணம் அவென்ஜர்ஸ் திரைப்படத்தின் முந்தய பாகமான அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் பிரமாண்டம்.
ஆனால் அவென்ஜர்ஸ் எண்டு கேம் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. அழுத்தமான கதை களம் இல்லாமல் போனதும், சுவாரசியமான திரைக்கதை மற்றும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெறாமல்போனதும், கிளைமாக்ஸ் பகுதி மட்டுமே சுமாராக இருந்தாலும் - இவ்வாறு விறுவிறுப்பு இல்லாத ஒருபடம் மூன்று மணி நேரம் ஓடினால் ரசிகர்களால் உட்கார்ந்து இருக்க முடியுமா, முன்பதிவில் இருந்த வசூல் பின்னர் குறைய தொடங்கியது.
இது ஒரு மிக பெரிய சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் மக்களை பெரிதும் கவர்ந்தது. அந்த வரிசையில், இது வரை அட்டகாசமான கதை களத்துடன் வெளியான "X-மென்" X-Men படத்தின் அனைத்து பாகங்களும் வெற்றிபெற்றவை. இந்த வரிசையில், வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி "X-மென் டார்க் பீனிக்ஸ்" ( X-Men Dark Phoenix ) இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வெளியாக உள்ளது. அவென்ஜர்ஸ் படத்தின் ரசிகர்களை போலவே இந்த X-மென் படத்திற்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தற்பொழுது ரிலீஸ் ஆகும் X-மென் டார்க் ஃபீனிக்ஸ் கதை ஜீன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. "சோபியா டர்னர்" (
Sophie Turner) இந்த கதா பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் அதிக ரசிகர்களை கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை "ஜெனீபர் லாரன்ஸ்" (
Jennifer Lawrence) நடித்திருக்கிறார். நடிகை சோபியா டர்னர் ஒப்பிடுகையில் ஜெனீபர் லாரன்ஸ்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
X-மென் படக்குழு கூறுகையில், முன்பதிவில் வசூல் சாதனை அவென்ஜர்ஸ் போல செய்யாமல் போனாலும், திரைக்கு வந்த பின் படம் கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினர்களையும் கவரக்கூடிய சுவாரசியமான விசித்திர சக்திகளை கொண்டவர்களுக்கும் தீய சக்தி கொண்டவர்களுக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த திரைப்படம். இந்த பாகத்தில் அவர்கள் கூட்டத்தில் இருக்கும் ஜீன் கதாபாத்திரத்தை எதிராக திருப்பி அனைவரையும் அளிக்க எடுக்கும் முயற்சியே இப்படம்.