ads

X-மென் டார்க் பீனிக்ஸ்: லண்டன் சிறப்பு காட்சியில் சியோமி ரெட்மி நோட் 7

X-மென் டார்க் பீனிக்ஸ்: சியோமி ரெட்மி நோட் 7

X-மென் டார்க் பீனிக்ஸ்: சியோமி ரெட்மி நோட் 7

X-மென் டார்க் பீனிக்ஸ்: லண்டன் சியோமி "Xiaomi" மொபைல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த, லண்டனில் மே 22ஆம் தேதி நடக்கவுள்ள "X-மென் டார்க் பீனிக்ஸ்" படத்தின் சிறப்பு காட்சிகளை காண இலவச டிக்கெட் வழங்குகிறது. பொதுவாக சூப்பர் ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் போது மொபைல் நிறுவனங்கள் தங்களின் புகழ் பெற்ற குறிப்பிட்ட மொபைல் மாடல்களை படத்தின் போஸ்டர்களுடன் விற்பனைக்கு அனுப்பும். 

சியோமி மொபைல் நிறுவனம் இந்த சிறப்பு காட்சிக்காக தங்களது புகழ்பெற்ற ரெட்மி நோட் 7 மாடலின் X-மென் டார்க் பீனிக்ஸ் பதிப்பை வெளியிடுகிறது. இந்த நோக்கம், சூப்பர் ஹீரோ ரசிகர்களை கவர்ந்து தங்களது மொபைல் மாடல்களில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் மாடலை விளம்பரப்படுத்தி விற்கும், இது ஒரு விற்பனை யூக்தி.

"சாம்சங்" நிறுவனம் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. "X-மென் டார்க் பீனிக்ஸ்" வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், ரசிகர்களை மகிழ்விக்க பட குழு - மொபைல் நிறுவனங்கள் மற்றும் ஒருசில விளம்பர நிறுவனங்களுடன் சேர்ந்து சென்ட்ரல் லண்டனில் 6மணிக்கு சிறப்பு காட்சிகளை நடத்த உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த காட்சிக்கு அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுக்கும் படலத்தை சியோமி மொபைல் நிறுவனம் தொடங்கிவிட்டது. 

X-மென் டார்க் பீனிக்ஸ்: லண்டன் சிறப்பு காட்சியில் சியோமி ரெட்மி நோட் 7

லண்டனில் உள்ள சியோமி மொபைல் நிறுவன அறிவிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நபர்கள்,  X-மென் டார்க் பீனிக்ஸ் ரசிகர்களின் சிறப்பு காட்சி விழாவில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் பார்க்க முடியும், குறிப்பாக சிறப்பு விருந்தினர்களுடன் புகைப்படங்கள், படத்தில் உள்ள சுவாரசியமான சில நிமிட காட்சிகளை காணலாம்.

சியோமி மொபைல் நிறுவனம் இந்த ஒரு படத்திற்காக மட்டும் இதை செய்யவில்லை, அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்திற்காகவும் முயற்சிகள் மேற்கொண்டது, மற்றும் "அவென்ஜர்ஸ் எண்ட்கேம்" படத்தின் போஸ்டர்களுடன் ரெட்மி நோட் 7 விளம்பரப்படுத்தியது ஆனால், பின்னர் அதை பற்றிய எந்த ஒரு செய்தியும் இல்லை.

X-மென் டார்க் பீனிக்ஸ்: லண்டன் சிறப்பு காட்சியில் சியோமி ரெட்மி நோட் 7

X-மென் டார்க் பீனிக்ஸ்: லண்டன் சிறப்பு காட்சியில் சியோமி ரெட்மி நோட் 7