ads
பிக் பாஸ் சம்யுக்தா: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர், காரணம் இது தான்.
விக்னேஷ் (Author) Published Date : Nov 29, 2020 05:30 ISTபொழுதுபோக்கு
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆரி, சோமசேகர், நிஷா, அனிதா, சனம் மற்றும் ரமேஷ் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.
ஆனால் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக "Bigg Boss Topple Card" முறையை அறிமுக படுத்தி, இந்த கார்டை ஜெயிப்பவர்கள் நாமினேட் ஆகாமல் இருப்பவரை நேரடியாக தேர்வு செய்து, தேர்வு செய்பவர்கள் நாமினேஷனில் இருந்து வெளியேறலாம்.
இந்த போட்டியில் வெற்றிபெற்ற அனிதா, சம்யுக்தாவை நாமினேட் செய்கிறார். ஏற்கனவே ஒரு குழுவாக செயல்படும் அர்ச்சனா கூட்டத்தை சேர்ந்தவர்கள், அனிதா மற்றும் சனமிடம் விலகியே இருக்கிறார்கள்.
அனிதா சம்யுக்தாவை கூறியதற்கு காரணம், சம்யுக்தா தன்னை பற்றி தனக்கு வேண்டியவர்கள் என்ன சொன்னாலும் அதை பெரிது படுத்துவதில்லை, குறிப்பாக அர்ச்சனா குழுவை சேர்ந்தவர்கள்.
அர்ச்சனா குழுவால் ஒதுக்கப்பட்டவர்கள் ஆரி மற்றும் சனம், இவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும், அதற்கு அர்த்தம் இல்லாமல் மற்றவர்களை குழப்பி ஆரி மற்றும் சனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வந்தார்.
சம்யுக்தா மற்றும் ஆரி இடையே பல முறை வாக்குவாதம் வந்துள்ளது. இவர்களின் வாக்குவாதத்தை உன்னிப்பாக கவனித்தால், ஆரியின் நேர்மையான வாதத்திற்கு இவரால் பதில் சொல்ல முடியாத போது, இவர் சம்பந்தம் இல்லாமல் ஆரி கூறிய வேறு ஏதாவது ஒரு வார்த்தைக்கு புதிதாக அர்த்தம் கண்டுபிடித்து, தனது சண்டையை வலுப்படுத்துவார்.
இதற்கு துணையாக சம்யுக்தாவின் ஆதரவாளர்களும் சேர்ந்த ஆரியை மட்டம்தட்ட தொடங்குவார்கள். இது போன்ற வாக்குவாதங்கள் பல முறை இவர்களுக்குள் நடந்துள்ளது, ஆரியும் பல முறை தனிமைப்படுத்தப்பட்டார்.
தனது நேர்மையான செயலால் ஆரி மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், மேலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே இவரை புரிந்து கொண்டிருந்தனர்.
இந்த வாரம், சம்யுக்தா ஆரியின் பெற்றோரை கேவலமாக பேசியதற்கு மக்கள் பெரிதும் கோபமடைந்தனர். இதனால் ஏற்கனவே அதிக ரசிகர்கள் இருக்கும் ஆரிக்கு அதிக ஓட்டுகள் போட்டு காப்பாற்றிய மக்கள், சம்யுக்தாவிற்கு குறைவான ஓட்டுகள் கிடைக்க செய்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.