கடந்த 5 ஆண்டுகளில் உச்சநிலையில் வேலையின்மை - கே எஸ் அழகிரி கருத்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி பாஜக அரசாங்கம் 2014 பொதுத் தேர்தலில் வாக்குறுதிக்கு மாறாக இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று விமர்சித்தார். செய்தியாளர் அறிக்கையில் மோடி அவருடைய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
நாட்டின் வேலையின்மை நிலை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் உச்சத்தை தொட்டது. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 4.27 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக மோடி உறுதியளித்து இருந்தார். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை என்று புள்ளி விவரம் கொண்டு பேசினார்.
உற்பத்தி செலவை விட 50 சதவிகிதம் அதிகமாக விவசாயிகளுக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார். ஆனால், பெரும்பாலான பண்ணைப் பொருட்கள் குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன. பா.ஜ.க. மற்றும் மோடியைத் தவிர்ப்பதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்கும்படி வாக்காளர்களை அவர் வலியுறுத்தினார்.