ads

ஜனநாயக கடமை ஆற்றிய தமிழ் திரைத்துறை பிரபலங்கள்

 ஜனநாயக கடமை ஆற்றிய தமிழ் திரைத்துறை பிரபலங்கள்

ஜனநாயக கடமை ஆற்றிய தமிழ் திரைத்துறை பிரபலங்கள்

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 38 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் 822 வேட்பாளர்களின் தலைவிதியை  5.8 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்கு மூலம் முடிவு செய்யும் நாள் இன்று. 

மக்களவை தேர்தல் 2019 ஆனா வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடனும் தங்கள் கடமை அறிந்து வாக்களித்து வருகின்றனர். பொது மக்கள் மட்டும் இல்லாது திரைத்துறை சேர்ந்த பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பதிவு செய்தார். ரஜினி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சரியான தலைவர்களை தேர்தெடுக்கும் பொறுப்பு தமிழக  மக்களுக்கு உள்ளது என்று கூறினார். நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரது மகள் ஸுரிதி ஹாசன் அளவார்பேட்டை சாவடியில் வரிசையில் காத்து இருந்து வாக்களித்தனர். அவர்களது வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரம் சிறிய கோளாறு  ஏற்பட்டதால் நெடிய நேரம் கழித்து வாக்கு பதிவு செய்தனர். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சாவடியில் பொது மக்களுடன் வரிசையில் நின்று நடிகர் விஜய் வாக்கு பதிவை மேற்கொண்டார். ஊடகங்களில் அவரை பற்றி பரபரப்பை ஏற்படுத்தி கொள்ளாமல் ஜனநாயக கடமை ஆற்றி மக்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். நடிகர்  அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி திருவான்மியூரில் வாக்களித்தனர். தி.நகரில் உள்ள வாக்கு சாவடியில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மனைவி ரஞ்சனி வாக்களித்தனர்.

மேலும் நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சித்தார்த், பிரபு, விக்கரம் பிரபு, கெளதம் கார்த்திக், நகைச்சுவை நடிகர் வடிவேல், இசைஅமைப்பாளர் அனிருத், இயக்குனர் முருகதாஸ்  மற்றும் பலர் வாக்குகளை பதிவு  செய்தனர். நடிகைகள் குஷ்பு, திரிஷா, தேவயானி  பாடகி சின்மயி வாக்குகளை பதிவு செய்தனர். 

திரைத்துறையினர் மட்டுமில்லாது அரசியல் பிரமுகர்களும் தங்கள் வாக்குகளை பதிவு  செய்தனர். எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் வாக்கு பதிவை பொது மக்களுடன் வரிசையில் நின்று பதிவு செய்தார். ஸ்டாலின் அவர்கள் குடுபத்தினருடன் சென்னையில் வாக்கு பதிவு செய்தார்கள். பெரியகுளம் வாக்கு சாவடியில் ஓ.பன்னீர்செல்வம் வாக்கினை பதிவு செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி சாலிகிராமத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். மைலாப்பூரில் கனிமொழி அவர்களும், சிவகங்கையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் வாக்கு பதிவு செய்தார்கள். கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா வாக்கு பதிவு செய்தனர். திண்டிவனத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கினை பதித்தார். மேலும் சீமான் மற்றும் பலர் தங்களது கடமையை செய்தார்கள். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சராசரியாக 5 மணி நிலவர படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஜனநாயக கடமை ஆற்றிய தமிழ் திரைத்துறை பிரபலங்கள்