ads

சிவகார்த்திகேயன் வோட்டு செல்லாது, வாக்குச்சாவடி அதிகாரி மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையர்

சிவகார்த்திகேயன் வோட்டு செல்லாது

சிவகார்த்திகேயன் வோட்டு செல்லாது

தமிழக முதண்மை  தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாஹூ, சென்னையில் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் அளித்த பெட்டியில் தெரிவித்தார். நடிகர் சிவக்கரைகேயன் ஏப்ரல் 18 ம் தேதி வாக்களிக்க சென்ற பொது வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்று வாக்களிக்க அனுமதிக்கவில்லை. சிறிது நேரம் வாதத்திற்கு பின் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

ஏப்ரல் 18 ம் திகதி சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் வளசரவாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றனர். பட்டியலில் பெய இல்லாத போதிலும் அவர் வாக்களித்திருப்பது வாதத்திற்குள்ளானது.  "இதுபோன்ற வாக்குப்பதிவு அதிகாரிகளின் ஒரு பகுதியினர் தவறு செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டிருக்கிறேன்," என்று சஹூ செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகர் அதே நாளில் தனது மைய்யிட்ட விரலை ட்வீட் செய்து, "வாக்களிப்பது உங்கள் உரிமை, உங்கள் உரிமைக்காக போராட வேண்டும்." என்றார்.

அதேபோல், நடிகர் ஸ்ரீகாந்த், சாலிகிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற போதிலும், அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். "நான் வீட்டிற்கு வந்தபிறகு, எனது ஆத்ஹார் கார்டு புதிய முகவரி என்று உணர்ந்தேன், பின்னர் என் வாக்களிப்பு வள்ளுவர் கோட்டத்தில் இருப்பதாக நான் கண்டறிந்தேன்" என கூறியுள்ளார்." இதுபோல நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ரோபோ ஷங்கர் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

சிவகார்த்திகேயன் வோட்டு செல்லாது, வாக்குச்சாவடி அதிகாரி மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையர்