பாஜக தேசிய செயலாளர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் ஹெச். ராஜாவின் காரைக்குடியின் வீட்டின் முன்னால் மதுபானம் எதிர்ப்பு ஆர்பாட்டக்காரரும் சட்ட பட்டதாரியுமான நந்திணி மற்றும் அவரது தந்தை கே. ஆனந்தன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர் தந்தை-மகள் இருவரையும் தாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெறாததால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் ஆனந்தன் கூறியதாவது "போராட்டம் நடத்திய பின்னர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, ராஜாவின் ஆதரவாளர்கள் வாகனத்தின் மீது மோதியும், என்னை இழுத்துச் சென்று முரட்டுத்தனமான முட்ப்புதரில் தள்ளிவிட்டனர் என்று கூறினார். இது போன்ற தாக்குதல் என் மீதும் என் மகள் மீதும் நான்காவது முறையாக நடக்கும் முயற்சியாகும்" என்று விவரித்தார்.

