ads

மனநல மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் 98% வாக்குப்பதிவு

மனநல மருத்துவ நிறுவனத்தில் வாக்குப்பதிவு

மனநல மருத்துவ நிறுவனத்தில் வாக்குப்பதிவு

முதன்முறையாக மனநல மருத்துவ நிறுவனதில் வசிப்பவர்கள் அங்கு அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் தங்கள் உரிமையானா வாக்கை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். நிறுவனத்தில் வசிப்பர்களுக்கு முடிவு எடுக்கும் திறன் உள்ளதா என்றும் வாக்களிக்க தகுதியானவரா என்றும் பிப்ரவரி மாதம் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.

ஒப்புதல் பெற்ற பின்னர் வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சியும் நிறுவனத்தில் சாவடியை அமைத்து தக்க வசதிகளையும் செய்து கொடுத்தனர். மொத்தம் 156 இல், 100 ஆண்கள் மற்றும் 56 பெண்கள் இருந்தனர். இருவரால் வாக்களிக்க முடியவில்லை, ஒருவர் வாக்களிக்க விரும்பவில்லை என்று மனநல மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பி. பூர்ண சந்திரிகா

அவர்கள் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் தேர்தல் அதிகாரிகள் நிறுவன வாசிகளுக்கு

தனியாகவும் பிரத்தியேகமாகவும் ஒரு வாக்குச் சாவடியை அமைத்துள்ளனர்.

55 வயதான வாழ்வாசி தெரிவித்ததாவது "இது எனது ஜனநாயக உரிமை. நான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்கிறேன்" என்று கருத்தை பதிவு செய்தார். "மனநலமின்மை மனப்பான்மையின் காரணமாக, ஒரு குடிமகனாக அவர்களின் உரிமைகள் கையாளுவதற்கு தகுதி அகற்றப்பட்டது. இது முற்றிலும் தவறானது.மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாக்களிப்பது பெரிய செய்தியாக கருதப்படாமல் சாதாரணமாக செய்தியாக கருதப்படுகிற ஒரு நேரத்திற்காக காத்திருக்கிறோம்" என்று நிறுவன இயக்குனர் கூறினார்.

மனநல மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் 98% வாக்குப்பதிவு