ads

தமிழகத்தை இயக்குவது தமிழக விவசாயிகள், நாக்பூரிலிருந்து இல்லை: ராகுல் காந்திக்கு முதல்வர் பதிலடி

ராகுல் காந்திக்கு முதல்வர் பதிலடி

ராகுல் காந்திக்கு முதல்வர் பதிலடி

முதல்வர்  எடப்பாடி அவர்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்கிறார் என்று சலசலக்கப்படுகிறது. கட்சி  வெற்றி அடைவதற்கான  ஒவ்வொரு சாத்தியமான செயல்களையும் முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.  கடந்த மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் 13 மணி நேரம் பிரச்சாரம் செய்து வருகிறார். "இந்தத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. ஒரு மகத்தான வெற்றியை பதிவு செய்யும் என்று நான் நம்புகிறேன்," என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் . 

மேலும் பேசிய முதல்வர் "கடந்த இரண்டு ஆண்டுகள் அ.இ.அ.தி.மு.க அரசு மக்களுக்கு நிலையான ஆட்சி வழங்கியுள்ளது, உண்மையை சந்தேகிக்கிற பலர் இரண்டே வாரங்களில் ஆட்சி வீழ்ந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர், ஆனால் நிலையான அரசாங்கத்தை வழங்கியது. மறைந்த ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட  நலத்திட்டங்களை தொடர்ந்தது மட்டுமல்லாமல் நலிவுற்றவர்களுக்கு அரசாங்க நலத்திட்டங்கள் மூலம் ஆதரவு வழங்கியது" என்று கூறினார்.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை-சேலம் அதிவேக சாலை அமைப்பதில் மதிப்போம் என்று கூறினார். கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது, பா.ஜ.க.வால் ஒரு வலுவான தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்பதால் தான் அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைத்ததற்கான முக்கிய காரணம் என்று கூட்டணிக்கான விளக்கத்தை அளித்தார்.

மிக முக்கியமாக, பா.ஜ.க எங்கள் நாட்டை உறுதியாக பாதுகாப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், என்று உரைத்தார்.  தி.மு.க.வை போல தங்களை வளப்படுத்திக்கொள்ள மத்தியில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி வைத்து கொள்வது இல்லை. நாக்பூரில் இருந்து தமிழ்நாடு நிர்வகிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றசாட்டை நிராகரித்தார், மேலும் அரசாங்கம் தமிழக விவசாயியால் நடக்கின்றது என்றார். இதன் விளைவாக, தமிழ்நாடு அமைதியின்  புகலிடமாக பாராட்டப்படுகிறது என்று கூறினார். 

தமிழகத்தை இயக்குவது தமிழக விவசாயிகள், நாக்பூரிலிருந்து இல்லை: ராகுல் காந்திக்கு முதல்வர் பதிலடி