ads

தேர்தல் ஒத்தி வைப்பதற்கான மனு: சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிக்கப்பு

தேர்தல் ஒத்தி வைப்பதற்கான மனு: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் ஒத்தி வைப்பதற்கான மனு: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதால் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய அல்லது தடை செய்ய மதுரையை சேர்ந்த வக்கீல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் மனுவை நிராகரித்துவிட்டனர்.

மனுதாரர் மற்றும் சுயேச்சை வேட்பாளருமான கே.கே. ரமேஷ் என்பவருக்கு ஒரு எச்சரிக்கையை அளித்தனர். மேலும் அற்பமான மனுவிற்காக அபராதம் விதிக்கவும் தயங்க மாட்டோம் எனக்கூறி நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமோனியும் பிரசாத் மனுவை தள்ளுபடி செய்தனர். முன்னர், தேர்தல் ஆணைக்குழு நீதிபதிகளிடம், பதிவுசெய்யப்படாத பெயர் கொண்ட கட்சியான சௌராஷ்ட்ரா முன்னேற்ற கழகம் மற்றும் அ.இ.அ.தி.மு.க சேர்ந்து நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு வாகனங்களில் 4,000 பேரைக் கொண்டுவந்து, 500 ரூபாய் மற்றும் உணவு டோக்கன்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை வழங்கியதாக நிரூபணமாகாத குற்றம் கோரப்பட்டது.

ஏப்ரல் 7ம் தேதி பாண்டிகோவிலில் நடந்த பொதுக் கூட்டத்தில், ஆளும் கட்சி ஒவ்வருவருக்கும் ரூ. 500 - 2,000 வழங்கியது என்று மனுதாரர் குற்றம் சாட்டினார். பறக்கும் படையினர் அந்த இடத்தை பார்வையிட்டது, ஆனால் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தாதலால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தேர்தல் ஒத்தி வைப்பதற்கான மனு: சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிக்கப்பு