ads

ராமநாதபுரத்தில் பா.ஜ.க.விற்கு பிரச்சாரம் செய்த அ.தி.மு.க பிரமுகர் தாக்கப்பட்டார்

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

புதன்கிழமை இரவு திருப்பாலைக்குடியில் உள்ள ஐ.எம்.எம்.எல் உறுப்பினரால்  தாக்கப்பட்டதால் காயமடைந்த அ.இ.அ.தி.மு.க  பிரமுகர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்பலிக்குடியின் அ.இ.அ.தி.மு.க இளைஞர் பேரவை செயலாளர் முகம்மது காசிம் பா.ஜ.க. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாகத்தான் தாக்குதல் நடந்தது என விசாரணையில் தெரிய வந்தது.

ஆதாரங்களின்படி, திருப்பாலைக்குடி கிராமத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற நயினார் நாகேந்திரனனை காசிம் வரவேற்று, பின்னர் அவருக்குப் பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து, ஐ.எம்.எம்.எல் உறுப்பினர் முகம்மது யூசுப் (45) முகம்மது காசிமுடன் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டார்.

காசிம் கடுமையான காயங்களுடன் பாதிக்கப்பட்டு ராமநாதபுரத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமையகம் மருத்துவமனைக்கு விரைந்தார். வியாழக்கிழமை, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.மணிகண்டன் மருத்துவமனையில் இருந்த கசினை பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

முன்னதாக ஏப்ரல் 1 ம் தேதி நயினார் நாகேந்திரன் வேனில் செல்லும்போது சோடா பாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதல் விசாரணையில் உள்ள நிலையில் மீண்டும் அவர் சம்மந்தப்பட்ட நபர் பாதிக்கப்பட்டதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த முன்வந்துள்ளனர்.  நயினார், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் ராஜ்ஹா ஆகியோருடன் பிரச்சாரதில் ஈடுபட்டபோது இந்த தாக்குதல் நடந்தது. அ.தி.மு.க.வின் திருப்புளனியின் அலுவலக பொறுப்பாளர் உதயதேவன் தாக்குதலின்போது தலையில் காயமடைந்தார்.

ராமநாதபுரத்தில் பா.ஜ.க.விற்கு பிரச்சாரம் செய்த அ.தி.மு.க பிரமுகர் தாக்கப்பட்டார்