தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா, விஸ்வகர்மாவின் ஜெகத் குரு ஸ்ரீ பாபுஜி சாமி அவர்களின் தலைமையில் இன்று (27-டிசம்பர்-2020) கோவையில் ஆராதனை பெருவிழா நடைபெற்றது.

கோவை அசோக் நகரில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு அம்மன் அர்ஜுனன் MLA அவர்கள், அதிமுக இளைஞர் பாசறையின் மாநில துணை செயலாளர் விஷ்ணு பிரபு அவர்கள், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு சிபி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.