அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கும் தமிழக முதல்வர்
தமிழக மக்களுக்காக பெரிதும் உதவும் கட்சியாக அ.இ.அ.தி.மு.க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு தனி மனிதனும் உணவின்றி தவிக்க கூடாது என்பதற்காக பல மாதங்களாக அணைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு "இலவசமாக" மளிகை பொருட்களை வழங்கியவர் மாண்புமிகு முதல் அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி.
இவரின் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசு, வரும் பொங்கல் திருநாளில் மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.
தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1.80 கோடி விலையில்லா வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தை டிசம்பர் 21ஆம் தேதி , 2020 முதல் தொடங்கி வைத்துள்ளார்.