ads

கிலியட் சயின்ஸ்: 450,000 டோஸ் ரெம்டிசிவியர் நன்கொடையாக வழங்கப்படும்

கிலியட் சயின்ஸ் ரெம்டிசிவியர்

கிலியட் சயின்ஸ் ரெம்டிசிவியர்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிலியட் சயின்ஸ் நிறுவனம், ரெம்டிசிவியர் பிராண்டான வெக்லரியின் 450,000 மருந்தை, இந்திய அரசுக்கு நன்கொடையாக கொடுக்க உள்ளது.

"இந்தியாவில் அண்மையில் கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்திருப்பது சமூகங்கள் மீது பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கிலியட்டின் தலைமை வணிக அதிகாரி ஜோஹன்னா மெர்சியர் கூறினார்.

மருந்துகளை நன்கொடையாக வழங்குவது மட்டுமில்லாமல், கிலியட் சயின்சஸ் தொழில்நுட்ப உதவிகளையும், புதிய உள்ளூர் உற்பத்தி வசதிகளைச் சேர்ப்பதற்கான ஆதரவையும், உற்பத்தியை விரைவாக அதிகரிக்க செயலில் உள்ள மருந்து மூலப்பொருளை (ஏபிஐ) நன்கொடையையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிலியட் நிறுவனம் மருந்தை வேகமாக உற்பத்தி செய்ய ஏழு இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சின்ஜீன், சன் பார்மாசூட்டிகல் நிறுவனமும் கூட்டு சேர்ந்து மருந்து தயாரிக்கிறது.

இந்தியாவில் கோவிட் -19 தொற்று நாளுக்குநாள் உயர்ந்துள்ள நிலையில், இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு நிறுவனங்களுக்கு ரெம்டிசிவியர் தயாரிக்க விரைவாக ஒப்புதல் அளித்தது.

இதனால் அவர்களின் ஒருங்கிணைந்த திறனை இரட்டிப்பாக்கி மாதத்திற்கு 7.8 மில்லியன் குப்பிகளை தயாரிக்க முடியும்.

நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவமனைகள் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பியிருக்கும் இந்த நிலையில், மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலைக் குறைப்பு முக்கியத்துவம் கொண்டது.

கிலியட் சயின்ஸ்: 450,000 டோஸ் ரெம்டிசிவியர் நன்கொடையாக வழங்கப்படும்