ads

சாலை விதி மீறல் - நமக்கு தெரியாமல் காத்திருக்கும் அபராத தொகை

சாலை விதி மீறல்

சாலை விதி மீறல்

நீங்கள் பெருநகரங்களில் வாகனம் ஓட்டுவீர்களா? கண்டிப்பாக முழுமையாக படிக்கவும். உங்களின் வாகனத்திற்கு ஏதேனும் சாலை விதி மீறல் அபராத தொகை நோட்டீஸ் வந்துள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் லைசென்ஸ் பறிபோகும் வாய்ப்பு அதிகம்.

இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்காணிக்க மத்திய மாநில அரசுகள் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பது கண்காணிப்பு கேமிராக்கள்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து சாலை போக்குவரத்தையும் கண்காணிக்க முடியும். வாகன ஓட்டுனர்களை கண்காணிக்க பல இடங்களில் சி சி டிவி கேமிராக்கள் பொறுத்தப்பட்டிருக்கிறது, முக்கியமாக டிராபிக் சிக்கனலில் கண்காணிப்பு கேமிராக்கள் அதிகம்.

இவர்கள் பொருத்தியிருக்கும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம், ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பவர்கள் மற்றும் பல சாலை விதி மீறல் செய்தால், சுலபமாக கண்காணித்து அவர்களின் வாகன எங்களையும் அதிநவீன சி சி டிவி எச்.டி கேமிராக்கள் மூலம் பதிவு செய்து, அவர்களின் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்ப முடியும்.

இப்பொழுது இந்த பழக்கம் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வியை விட, குறிப்பிட்ட வாகன உரிமையாளரின் செல்போன் எண்ணிற்கு நேரடியாக "விதி மீறல் அபராத" குறிப்பை குறுந்செய்திகள் மூலம்  அனுப்பி வருகிறார்கள் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்.

மக்கள் புதிய வாகனங்களை வாங்கும் போது, உரிமையாளரின் செல்போன் எண்களை வட்டாரப் போக்குவரத்து துறை மூலம் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்படுவதால், போக்குவரத்துக்கு காவல்துறை நாம் சாலை விதிகளை மீறினால், நமது செல்போனிற்கு விதிமீறல் அபராத தொகை பற்றிய குறுஞ்செய்திகள் மூலம் அனுப்ப முடியும்.

இதில் சில சிக்கல்கள் நடைமுறையில் உள்ளது, அது பலருக்கும் விதி மீறல் குறுஞ்செய்திகள் வருவதில்லை, ஒரு சிலருக்கு தவறுதலாக விதி மீறல் நோட்டீஸ் வருவதும் உண்டு. இது ஆரம்ப கால தொழில்நுட்ப கோளாறு காரணங்கள் அல்லது பதிவிடும்போது ஏற்படும் பிழைகளாக இருக்க வாய்ப்பு அதிகம்.

நமக்கு எந்த ஒரு நேரடி நோட்டீஸ் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் விதி மீறல் எச்சரிக்கைகளும் வரவில்லை என்றால், அலட்சியமாக இருக்க கூடாது. நாம் செய்ய வேண்டிய முக்கிய வேலை, போக்குவரத்து அதிகாரப்பூரவ இணையத்தில் நமது வாகனத்தின் எண்களை வைத்து "விதி மீறல் நோட்டீஸ்" வந்துள்ளதா என்று பார்ப்பது அவசியம், விடியோவை பார்க்கவும்.

காரணம், நமது ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இரண்டு வேலைகளை சரிபார்ப்பது அவசியம், 1. நமது வாகனத்தின் பதிவேட்டில் நமது செல்போன் எண்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அரசின் இந்த வலைத்தளத்திற்கு சென்று சரிபாருங்கள்.

2. நமது வாகனத்தின் எண்களை வைத்து அரசின் இணையத்தளம் https://echallan.parivahan.gov.in/index/accused-challan மூலம் விதி மீறல் நோட்டீஸ் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு விதி மீறல் நோட்டீஸ் வந்திருந்தால், அதனை சுலபமாக ஆன்லைனில் செலுத்தலாம், எங்கும் செல்ல தேவையில்லை. எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதை கீழே குறிப்பிட்டுள்ள வீடியோ உங்களுக்கு உதவும். 

சாலை விதி மீறல் - நமக்கு தெரியாமல் காத்திருக்கும் அபராத தொகை