ads

இந்தியா மிகவும் பின்தங்கிய நாடு என்பது கொரோனா மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்

இந்தியா மிகவும் பின்தங்கிய நாடு என்பது கொரோனா மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்

இந்தியா மிகவும் பின்தங்கிய நாடு என்பது கொரோனா மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்

இந்தியா மிகவும் பின்தங்கிய நாடு என்பது கொரோனா மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது கோபம் அடைய செய்யும் வாக்கியம் இல்லை மற்றும் இதற்கு காரணம் அரசாங்கம் இல்லை. வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வேலைகளை செய்து, நேரங்களை வீணடிக்கும் இளைய மற்றும் முதிய சமுதாயம் தான். 

எந்த ஒரு வழியிலும் தங்களை முன்னேற்ற வழிகளை தேடாமல், இன்றும் பொறுப்பில்லாமல் வெளியே சுற்றித்திரியும் அனைத்து வயதுடையவர்கள். யாராவது கொரோன நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தீர்களா? இன்று ராணுவத்திற்கு சமமாக நாட்டை காப்பாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதை சார்ந்தவர்கள் போதுமான பாதுகாப்பான கவசங்கள் இல்லை என்றாலும், மக்களை காப்பாற்ற குடும்பத்தை விட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

இவர்களை மேலும் சோர்வடையாமல் இருக்குவும், இவர்களுக்கு நோய் தொற்று வராமல் இருக்க, நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி 144 தடை, ஆனால் மக்கள் தங்களுக்கு வராது என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் சுற்றுகிறார்கள். மருத்துவர்களுக்கு நோய் வந்தாலோ அல்லது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, சாதாரண மக்களால் கொரோனா நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது.

தெரிந்து கொள்ளுங்கள் இன்றய இந்தியாவின் நிலை,

- போதுமான பாதுகாப்பு கவச உடைகள் மெரும்பாலான மருத்துவர்களுக்கு இன்னும் (31-03-2020) கிடைக்கவில்லை. நீங்கள் பார்க்கும் வெளிநாட்டு வீடியோக்களில் இருக்கும் மருத்துவ கவச உடைகள் நமது மருத்துவர்களிடம் இல்லை.

-  மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும்தான் கொரோனாவிற்கான சோதனை கூடங்கள் இருக்கிறது. இதில் ஒரு நாளைக்கு அதிகமாக 30 நபர்களுக்கு மட்டுமே சோதனை செய்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

- கணக்கு போட்டு கொள்ளுங்கள், தமிழகத்தில் மட்டும் பல ஆயிரக் கண்கோர்களுக்கு இன்னும் சோதனை அறிக்கைகள் கிடைக்க பெறவில்லை. இது இந்தியா முழுவதும் இருக்கும் மாநிலங்களுக்கு பொருந்தும்.

- அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் ஒரு நாளைக்கு 1000துக்கும் மேற்பட்டோருக்கு சோதனை முடிவுகளை அறியும் அளவிற்கு மருத்துவ வசதிகளுடன் முன்னேறி இருக்கிறார்கள். இது தான் அவர்களின் நாடுகளில் அதிகமாக கொரோனா தொற்று உள்ளதாக நமக்கு தெரிவிக்க படுகிறது.

நமது சோதனை கூடங்கள் மெதுவாக அறிக்கை வெளியிடுவதால், இந்தியாவில் அதிகம் கொரோனா இல்லை அல்லது இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த பட்டுள்ளதாக நினைக்காதீர்கள். இந்தியா பின்தங்கி தான் உள்ளது, என்பதை அனைவரும் அறிந்து வீட்டினுள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. இதுவே முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும்.

- தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் நினைத்தால் இரண்டே நாளில் தமிழகத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து செயல்படும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கு உதவ முடியும். இதற்காக இவர்கள் காலம் தாமதிக்காமல் தாமாக முன்வந்து, செயல்பட்டு அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்.

- தற்பொழுது சில நிறுவனங்கள் வெறும் முக கவசம் மட்டுமே கொடுக்கிறது, இது வெளியில் நடமாடும் மக்களுக்கு நூறு சதவிகிதம் உதவுமா என்றல், கிடையாது. ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருக்கும் அனைவரும் மருத்துவமனை மற்றும் சுயமாக தனிமையில் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், வெளியில் சுற்றும் மக்களுக்கு ஐம்பது சதவிகிதம் சராசரி தொற்று நோயில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

- இந்திய அரசாங்கம் முதலில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கவச உடைகள் மற்றும் கண்களுக்கு பாதுகாப்பான கண்ணாடிகள் தனியார் நிறுவனங்கள் மூலம், நேரடியாக அனைத்து கொரோனா பிரிவில் செயல் படும் மருத்துவர்களுக்கு கொடுக்கும்படி தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

- செய்தி நிறுவனங்கள் வெளியிடும் குறைவான எண்ணிக்கை, அதாவது உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்னிக்கை சரியான கணக்கு இல்லை என்பது - கொரோனா மருத்துவர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி இருக்கும் சூழ்நிலையில், தயவு செய்து இந்தியா கொரோனா நோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு விட்டது, இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று 

 வாட்சப்பில் வரும் செய்திகளை வைத்து தவறான எண்ணங்கள் கொள்ள வேண்டாம்.

- அரசாங்கம் தங்களால் முடிந்த வரையில் உதவி செய்கிறது, ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பு முயற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். வெளிவரும் போலியான செய்திகளை நம்பாதீர்கள். தயவு செய்து வீட்டினுள் பாதுகாப்பாக இருப்பது அவசியம், பின் வரும் நாட்களில் கொரோனா உறுதி செய்த அறிக்கைகள் வெளிவரும், எதிர்பார்த்ததை போல் எண்ணிக்கை அதிகரிக்க தான் செய்யும். 

- இதற்காக யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அலட்சியமாக மட்டும் இருந்து விடாதீர்கள். அரசாங்கம் தேவையான அனைத்து முயற்சிகளையும் செயல் படுத்திக்கொண்டிருக்கிறது, தயவு செய்து தேவை இல்லாத செய்திகளை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வதை தவிர்க்கவும். மக்கள் பயத்தில் இருக்கிறார்கள், அனாவசியமாக ஷேர் செய்யப்படும் தவறான செய்திகள் மக்களை இன்னும் பயத்தை உண்டாக்கும்.

லண்டனில் உள்ள இளவரசர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கொரோனா வந்துள்ளது ஆனாள் நமது அமைச்சர்களுக்கு வரவில்லை என்று பரவும் செய்திகளுக்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று, பொதுவாக தலைமை பதவியில் இருக்கும் நபர்களை உச்சகட்ட பாதுகாப்பில் தான் வைக்க வேண்டும்.  இவர்கள் நோய் தொற்று உள்ள வார்டுகளில் உள்ளே வந்து செல்ல தேவையில்லை. 

தலைமை சரிந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்கும், இதற்காக இவர்கள் பாதுகாக்க படுகிறார்கள் இருந்தும், அமைச்சர்கள் முதல் அனைத்து அரசு சார்ந்த அதிகாரிகள் மற்றும் முக்கியமாக காவல் அதிகாரிகள் வெளியே தற்போதைய நிலையை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இனிவரும் நாட்களில், இந்தியாவில் கொரோனா நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை கூடும், தயவு செய்து மக்கள் வீட்டினுள் இருக்க மற்றும்  மருத்துவர்களின் கஷ்டங்களை உணர்ந்து செயல்படுங்கள்.

இந்தியா மிகவும் பின்தங்கிய நாடு என்பது கொரோனா மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்