ads
சென்னையில் உள்ள BeWell மருத்துவமனை கோவிட் சிகிச்சைக்கு தடை செய்யப்பட்டுள்ளது
விக்னேஷ் (Author) Published Date : Aug 06, 2020 12:10 ISTஇந்தியா
தமிழக முதல்வர் தனது அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் BeWell மருத்துவமனை கிட்டத்தட்ட 19 நாட்களுக்கு ரூபாய் 12,20,000 வசூலித்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால், Bewell தனியார் மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் தெரிவிக்கையில், கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.