ads
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் இறந்த முதல் அரசியல்வாதி அன்பழகன்
விக்னேஷ் (Author) Published Date : Jun 10, 2020 10:40 ISTஇந்தியா
61 வயதான அன்பழகன் ஜூன் 2 ஆம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில், நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் தமிழக திமுக எம்.எல்.ஏ ஜே.அன்பழகன், இன்று காலை சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக அரசு தரப்பில் தெரிவித்தது, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கையை அலட்சியப்படுத்தாமல் பின்பற்றியிருந்தால், தொற்று வந்திருக்காது. மேலும் ஸ்டாலின் ஏற்படுத்திய நிகழிச்சியில் இந்த தொற்று வந்திருக்கிறது என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் இறந்த முதல் அரசியல்வாதி அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.