ads

X-மென் டார்க் பீனிக்ஸ்: பிரபலங்கள் கலந்துகொண்ட லண்டன் சிறப்பு காட்சி

X-மென் டார்க் பீனிக்ஸ்: பிரபலங்கள் கலந்துகொண்ட லண்டன் சிறப்பு காட்சி

X-மென் டார்க் பீனிக்ஸ்: பிரபலங்கள் கலந்துகொண்ட லண்டன் சிறப்பு காட்சி

X-மென் டார்க் பீனிக்ஸ்: நேற்று நடந்த "X-மென் டார்க் பீனிக்ஸ்" படத்தின் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியில் பலரும் கலந்து கொண்டனர். இதில் நடித்த புகழ்பெற்ற நடிகை நடிகர்கள் அவர்களது வீடியோ இன்டெர்வியூவில், படத்தை மிகவும் எதிர் பார்த்து காத்து கொண்டிருப்பதாகவும், படத்தின் கதை எவ்வாறு பயணிக்கின்றது என்று விளக்கினார்.மேலும் இந்த படம் நல்லமுறையில் வந்திருப்பதாகவும், பயமுறுத்தும் அளவிற்கு த்ரில்லிங்காக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த பாகத்தில் புதுமுக நடிகைகள் சிலர் நடித்துள்ளதாகவும், அவர்களின் நடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் சிறப்பாக இருந்தது என்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் "X-மென் டார்க் பீனிக்ஸ்" படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் திரையிடப்பட்டது, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சோபியா டர்னர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். குறிப்பாக சில ரசிகர்கள் படத்திலுள்ள கதாபாத்திரங்களை போலவே மேக்கப் மற்றும் உடைகளை அணிந்து  வந்தனர்.

இந்த சிறப்பு காட்சிக்காக லண்டனில் உள்ள சியோமி "Xiaomi" மொபைல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க இரண்டு அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலவச அனுமதி அளித்தது.

X-மென் டார்க் பீனிக்ஸ்: பிரபலங்கள் கலந்துகொண்ட லண்டன் சிறப்பு காட்சி