ads
மூக்குத்தி அம்மன் தமிழ் முழு படத்தை இலவசமாக பார்க்க டிஸ்னி ஹாட்ஸ்டார்
விக்னேஷ் (Author) Published Date : Nov 16, 2020 16:57 ISTபொழுதுபோக்கு
இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் ஆன படங்களில் மூக்குத்தி அம்மன் படம் நல்ல கருத்துள்ள சமூக விழிப்புணர்வு படமாக உள்ளது என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும், மக்கள் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்து மகிழ்வதுடன் புது படங்களையும் பார்ப்பார்கள்.
அனால் இந்த முறை கொரோன அச்சுறுத்தல் இருப்பதால், மக்கள் வீட்டிலேயே பார்ப்பதற்கு ஓடிடி வலைத்தளத்தில் மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு மாத சந்தாவாக ரூபாய் 299 அல்லது ரூபாய் 1499 ஒருவருடத்திற்கு செலுத்தினால், குடும்பத்துடன் வீட்டில் இருந்தே பார்க்கலாம்.
மூக்குத்தி அம்மன் படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் மூலம் இலவசமாக பார்க்க
தியேட்டர்களுக்கு சென்று பார்த்தல், ஒரு படத்திற்கே ரூபாய் 2000 தாண்டும், இதனால் மக்கள் ஓடிடி வலைத்தளங்கள் மூலம் பார்த்தால் வருட முழுவதும் இலவசமாக அனைத்து படங்களையும் பார்க்கலாம்.
டிஸ்னி ஹாட்ஸ்டார் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் இலவசமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
மூக்குத்தி அம்மன் படம் எப்படி இருக்கு?
தந்தை துணை இல்லாமல் குடும்பத்தை காப்பாற்றும் மூத்த மகனாக நடித்துள்ளார் ஆர். ஜே. பாலாஜி. இவரின் ஒரே லட்சியம் தனது கிராமத்தை போலி சாமியார்களிடம் இருந்து காப்பாற்றுவது.
பல துயரங்களை சந்திக்கும் இவர் ஒரு கட்டத்தில் தனது குலதெய்வ கோயிலுக்கு செல்கிறார், அங்கு அம்மன் காட்சியளித்து இவருக்கு உதவ முன்வருகிறார். வீட்டை விட்டு ஓடிப்போன தந்தை, கல்யாண வயதில் இருக்கும் தங்கைகள், பொய் பேசும் அம்மா இவர்களை எப்படி சமாளிக்கிறார் மற்றும் தனது கிராமத்தை காப்பாற்றுகிறாரா என்பதை நகைச்சுவையுடன் படமாக்கியுள்ளனர்.
மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயந்தாரா மிக சிறப்பாக நடித்துள்ளார், இவர் வரும் கிராபிக் காட்சிகள் மிக அழகாக அமைந்துள்ளது. தீபா வெங்கட் அவர்களின் குரல் நயன்தாராவிற்கு மிக பொருத்தமாக இருப்பதுடன், ஆர். ஜே. பாலாஜியுடன் செய்யும் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது.
ஆர். ஜே. பாலாஜியின் அம்மாவாக ஊர்வசி நடித்துள்ளார், படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று சொல்லும் அளவிற்கு இவர் அருமையாக நடித்துள்ளார். தனது நடிப்பில் எதார்த்தம், நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளார்.
மூக்குத்தி அம்மன் கோயிலுக்காக ஆர். ஜே. பாலாஜி நடத்தும் சிறு வேலைகள் மற்றும் இவர் தெளிவுபடுத்தும் போலி சாமியார்களின் திட்டங்கள் இன்று நடைமுறையில் இருக்கும் போலி சாமியார்களை பிரதிபலிக்கிறது.
ஒரு நல்ல கருத்துள்ள விழிப்புணர்வு படமாக மூக்குத்தி அம்மன் படம் அமைந்துள்ளது. படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் ஆனால் ஓடிடி பழக்கம் இல்லாமல் இருக்கும் அதிகமான சாமானிய மக்களை சென்றடையாது வருத்தம்.
பல ஆண்டுகளாக அம்மன் படங்களை பார்க்காமல் இருக்கும் மக்களுக்கு மூக்குத்தி அம்மன் படம் ஒரு நல்ல அம்மன் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கும்.