ads
பிக் பாஸ் தமிழ் 4: போட்டியாளராக வசுந்தரா தாஸ்
விக்னேஷ் (Author) Published Date : Sep 18, 2020 12:23 ISTபொழுதுபோக்கு
பிக் பாஸ் தமிழ் 4, இந்த வருடம் கொரோனா தொற்று காரணத்தினால் கொஞ்சம் தாமதமாக ஆரம்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரபாக இருக்கிறது.
இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நேற்று வந்த ஒரு செய்தியில், தல அஜித் நடிப்பில் வெளியான வெற்றி படம் சிட்டிசன் படத்தில் கதாநாயகியாக நடித்த வசுந்தரா தாஸ் பிக் பாஸ் தமிழ் 4 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார் என்பது தான் சமீபத்தில் வெளியான செய்தி.
ஏற்கனவே லட்சுமி மேனன் உட்பட பலரின் பெயர்கள் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வர இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் வசுந்தரா தாஸ் பெயர் வந்துள்ளதால், நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதுவரை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வந்துள்ளது, இதில் கொரோனா விழிப்புணர்வு மட்டும்தான் இருக்கிறது, நிகழ்ச்சியின் போட்டியாளர்களை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வெளியீட்டு தேதியை இந்த மாதம் கடைசி வாரத்தில் விஜய் டிவி மற்றும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அறிவிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. மிக நம்பிக்கையான ஒருவர் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.