ads

டெடி தமிழ் படம்: மொக்கை ஆனால் மொக்கை இல்லை

டெடி தமிழ் படம்

டெடி தமிழ் படம்

வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் ஆனது போல் இப்பொழுது ஓ.டி.டி தளங்களில் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில், 12ஆம் தேதி மார்ச் மாதம் "டெடி" தமிழ் படம் ரிலீஸ் ஆனது.

ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதிஷ் நடிப்பில் வெளியான டெடி தமிழ் படத்தை தயாரித்தது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியான டெடி தமிழ் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

கடந்த சில வருடங்களாக நாம் அனைவரும் பார்த்த கதை, உடல் உறுப்புகளை திருடி தேவை படம் நபர்களுக்கு விற்கும் கதையை தான் இவர்களும் படமாக்கியுள்ளனர். புதிதாக இவர்கள் செய்திருப்பது ஒரு பொம்மை மூலம் கதையை நகர்த்தியுள்ளனர். 

டெடி தமிழ் படம்: மொக்கை ஆனால் மொக்கை இல்லை

பாதிக்கப்படும் நபரின் ஆத்மா அல்லது என்னவென்று தெரியவில்லை, ஒரு டெடி பொம்மைக்குள் சென்று தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் விரைவில் கற்றுக்கொள்ளும் திறமைசாலி ஆர்யாவின் உதவியை நாடுகிறது.

இவர்களின் கூட்டணியில் எப்படி சாயிஷா தன்னை காப்பாற்றிக்கொள்கிறார் மற்றும் இதை ஆர்யா எப்படி சிறப்பாக செய்துள்ளார் என்பது தான் கதை.

டெடி தமிழ் படம்: மொக்கை ஆனால் மொக்கை இல்லை

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிகை சாயிஷா வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் சில நிமிடத்திற்கு வருகிறார் பிறகு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வருகிறார். படம் முழுவதும் இவரின் ஆத்மா, டெடி பொம்மையில் இருந்து செயல்படுகிறது, நமக்கு பிடிக்கும் அளவிற்க்கு டெடி பொம்மையின் செயல்பாடுகள் மற்றும் குரலில் ஒரு தாக்கம் இருக்கிறது, மற்றபடி சாயிஷாவின் சாயல் எங்கும் இல்லை.

இது ஒரு லாஜிக் இல்லாத படம் என்பதால், எந்த ஒரு இடத்திலும் நாம் யோசிப்பது "படக்குழுவிற்கு கேடு விளைவிக்கும்". படத்தின் போக்கில் நாம் இதை ரசித்தால், இது மொக்கை படம் இல்லை, இல்லையெனில் இது மொக்கை படமாக தெரியும்.

டெடி தமிழ் படம்: மொக்கை ஆனால் மொக்கை இல்லை

மற்ற உடல் உறுப்பு கடத்தல் படங்கள் பெரும்பாலும் தமிழ் நாட்டில்தான் நடக்கும், இந்த படம் கொஞ்சம் செலவு செய்து வெளிநாடுகளில் எடுத்துள்ளனர். இந்தியாவில் ஆர்யாவிற்கு சதிஷ் உதவுகிறார், வெளிநாட்டில் கருணாகரன் உதவுகிறார்.

படத்தில் ரசிக்கும் படியிருக்கும் காட்சிகள், ஆர்யாவின் கட்டுக்கோப்பான உடல். பெண்களையும் தாண்டி ஆண்களுக்கும் இவரை போல் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரவைக்கிறது.

டெடி தமிழ் படம்: மொக்கை ஆனால் மொக்கை இல்லை

பலநூறு படங்களில் நீங்கள் பார்த்திருக்கும் ரயில் சண்டை காட்சிகள், இந்த படத்திலும் ஆர்யா ரயிலில் ஒரு பெண்ணை காப்பாற்ற மிக ஸ்டைலாக சண்டை போடுகிறார். இந்த காட்சிக்கு காரணம், பொம்மையாக இருக்கும் சாயிஷாவிற்கு ஒரு நம்பிக்கை தருவதற்காக இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் எந்த ஒரு தருணத்திலும், படத்தில் வரும் பல காட்சிகளை, இயக்குனர் பல படங்களில் இருந்து உருவியுள்ளார் என்று நினைக்க வேண்டாம், கதைக்கு தேவையான காட்சிகளே படத்தில் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட ரசிக்கும் காட்சிகள் என்றால் சதிஷ் இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் யாரையும் துன்புறுத்துவதில்லை. எதார்த்த காமெடியன் கருணாகரனும், எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் எதார்தமாகவே கதையில் உள்ளார்.

டெடி தமிழ் படம்: மொக்கை ஆனால் மொக்கை இல்லை

படத்தை பார்க்கலாமா வேண்டாமா? கண்டிப்பாக பார்க்கலாம். காரணம் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த ஒரு புதிய தமிழ் படமும் தேர்தல் காரணமாக ரிலீஸ் ஆக போவதில்லை. குழந்தைகளுடன் அமர்ந்து படத்தை பார்த்தால் நல்ல படம், பெரியவர்களை போல் லாஜிக் யோசித்தால் மொக்கை படம்.

டெடி தமிழ் படம்: மொக்கை ஆனால் மொக்கை இல்லை