ads
தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த குதிரைவால் தமிழ் படம்
விக்னேஷ் (Author) Published Date : Mar 20, 2022 22:14 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் கலையரசன் நடிப்பில் வெளியான படம் குதிரைவால். ட்ரைலரில் பலரின் கவனத்தை ஈர்த்த படம், வெளியான பிறகு கதையின் திறன் அந்த அளவிற்கு ஈர்க்கப்படவில்லை. இந்த நிலையில் குதிரைவால் முழு தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்க்க வெளியானது வேதனைக்குரியது.
தமிழ் ராக்கர்ஸ், டெலிக்ராம், மூவி ரூல்ஸ் போன்ற இணையதளங்கள் யுத்த சத்தம் படத்தையும் விட்டுவைக்கவில்லை, இந்த வாரம் ரிலீஸ் ஆன இரண்டு படத்தையும் இணையத்தில் வெளியீட்டுள்ளார்கள்.
தனது படத்தில் தனக்கான அரசியலை திணிக்கும் இயக்குனர் பா. ரஞ்சித் இந்த படத்திலும் அதை தவறவில்லை, தனக்கேற்ற பணியில் மக்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இணைத்துள்ளார்.
படத்தின் ஒருவரி சுருக்கம், தூக்கத்திலிருந்து விழிக்கும் கலையரசன் தனக்கு குதிரையின் வால் இருப்பதை உணர்ந்து, ஏன் எதற்காக முளைத்திருகிறது, இதற்கான தீர்வை தேடி அலைவது தான் கதை.
ட்ரைலரில் இதை பார்த்ததும், ரசிகர்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பை பெற்றது, படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய படம், ஆர்வத்தை இறுதிவரை பூர்த்தி செய்ய தவறியது என்றே கூறலாம். சுவாரசியம் இல்லாமல், ஒரு ஆமை வேகத்தில் செல்லும் சோர்வான கதை.
கலையரசன் தனது நடிப்பு திறமையை பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார், திடீரென்று குதிரை வால் முளைத்திருப்பதை உணர்கிறார். குதிரை தனது வால் எப்படி எல்லாம் அசைக்குமோ, அதேபோல் கலையரசன்
தனக்கு பின்னால் இருக்கும் வால் அசைவிற்கேற்ப தனது உடலை அசைப்பது அருமை.
வால் இருப்பது தனக்கு மட்டும்தான் தெரிகிறதா அல்லது, மற்றவர்களுக்கும் தெரிகிறதா என்ற குழப்பத்துடன் கலையரசன் அலைகிறார். இதில் தனக்கு வரும் கனவையும் இணைத்து, இதற்கான காரணத்தை தேட தொடங்குகிறார்.
இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கியுள்ள குதிரைவால் படம், ஒரு டாக்குமெண்டரி படம், விறுவிறுப்பு அல்லது மசாலா படம் கிடையாது. குதிரைவால் போன்ற படங்களை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும், இந்த படம் ஒரு புதிய முயற்சி.
இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் எதிர்பார்க்கும் மசாலா காமெடி படங்களுக்கு மத்தியில் இதுபோன்ற படங்களை தயாரிப்பதோ, இயக்குவது தவறில்லை, ஆனால் கொஞ்சம் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு கதைக்களத்துடன் இருந்திருந்தால், இதுபோல் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவும்.
நல்ல வரவேற்பை பெறாத நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் குதிரைவால் முழு படமும் பல பிரிண்ட்டுகளில் கசிந்தது தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர்களுக்கு வருமானம் குறைந்தது ஒரு வருத்தமான ஒரு செய்தி.