ads

சுல்தான் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் முதல் நாளே லீக் ஆனது

சுல்தான் தமிழ் படம்

சுல்தான் தமிழ் படம்

கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தமிழ் படம் சுல்தான், கொரோனா அதிகரித்து கொண்டிருக்கும் இந்த சூழலில் ஏப்ரல் 2, 2021 தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படத்தை நல்ல முறையில் ப்ரோமோஷன் செய்த காரணத்தினால் முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சுல்தான் தமிழ் முழு படம் ஆன்லைனில் கசிந்துள்ளது என்ற செய்திகள் வந்தாலும் மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்தனர்.

ஏற்கனவே பல இணையதளங்களில் கசித்திருந்தாலும், காலை சிறப்பு காட்சி முடிந்த பிறகு, சுமார் பத்து மணி அளவில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டெலிக்ராம் தளங்களில் சுல்தான் தமிழ் முழு படமும் லீக் ஆனது.

கடந்த ஒருவருடமாக பல நிகழ்வுகளில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயரிப்பாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் கொஞ்சமல்ல, இந்த சூழ்நிலையில் இதுபோன்ற புதிய படங்கள் இணையத்தில் கசிவது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது.

சுல்தான் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் முதல் நாளே லீக் ஆனது

சுல்தான் தமிழ் திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெப்போலியன் மற்றும் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகி ரஷ்மிகா மந்தனா நேரடியாக நடித்துள்ள முதல் தமிழ் படம் இது.

இந்த படம் 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்படவிருந்தது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு, இயல்பு நிலைக்கு வந்தபின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்கள்.

சுல்தான் தமிழ் படத்தின் கதை சுருக்கம், தாதா நெப்போலியனின் மகனாக கார்த்தி நடித்துள்ளார். பல நூறு ரவுடிகளால் வளர்க்கப்படும் கார்த்தி அவர்களை என்கவுன்ட்டரில் இருந்து காப்பாற்ற விவசாயத்தை கையில் எடுக்கிறார்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பகுதி சுமாராகத்தான் உள்ளது, இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்க்கு மோசம் இல்லை.

சுல்தான் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் முதல் நாளே லீக் ஆனது

குறிப்பு: நாங்கள் செய்தி நிறுவனம் என்பதால், மக்களுக்கு ஒரு செய்தியை தெளிவாக கொண்டு செல்வதில் கடமை பட்டிருக்கிறோம். செய்திகள் என்று வரும் சூழ்நிலையில் யார், எங்கு, எப்பொழுது, எப்படி, போன்ற குறிப்புகளை செய்தி நிறுவனங்கள் கூறுவது அவசியம். இது சம்பந்தட்ட நபர்களுக்கு தெரிவிப்பதின் மூலம், தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். மற்ற படி யாரையும், பைரசி இணையதளங்களில் படங்களை பார்க்க நங்கள் ஊக்கப்படுத்துவது இல்லை .

சுல்தான் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் முதல் நாளே லீக் ஆனது