இவனுக்கு சரியான ஆள் இல்லை தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

இவனுக்கு சரியான ஆள் இல்லை தமிழ் படம்



இந்த வருடம் பொங்கலுக்கு தெலுங்கில் ரிலீஸ் ஆன மகேஷ் பாபுவின் படம் "சரிலேரு நீகேவரு" (Sarileru Neekevvaru), இந்த படம் இன்று தமிழில் டப்பிங் செய்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளனர். 

தியேட்டரில் வெளியான சில மணிநேரத்தில் இவனுக்கு சரியான ஆள் இல்லை முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் பல பதிப்புகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய லீக் செய்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் தெலுங்கு ஒரிஜினல் பதிப்பு உள்ளதால், இவனுக்கு சரியான ஆள் இல்லை படம் எச்.டி பதிப்பில் ஆடியோவை மாற்றம் செய்து இணையத்தில் கசிய விட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம்.

இவனுக்கு சரியான ஆள் இல்லை படம் எப்படி?


மேஜர் அஜய் கிருஷ்ணா (மகேஷ் பாபு) காஷ்மீரில் ராணுவ அதிகாரியாக உள்ளார் மேலும் இவரின் குழுவில் உள்ள வீரர்களை வழிநடத்துகிறார்.

ஒரு மீட்புப் பணியின் போது, ​​அவரது அணியில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார், இதனால் அவர் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

எனவே, மகேஷ் பாபு தனது நண்பனின் தாயார் பாரதியை (விஜயசாந்தி) சந்திக்க கர்னூலுக்குச் சென்று திருமணத்திற்கு உதவுகிறார், மேலும் அவர் உண்மை நிலையை நண்பனின் குடும்பத்திற்கு சொல்ல ஒரு நல்ல சாந்தப்பத்திற்காக காத்திருக்கிறார்.

மகேஷ் பாபு கர்னூல் ஊருக்கு வரும்போதே விஜயசாந்தி குடும்பத்தினருக்கும் பிரகாஷ் ராஜுக்கும் உள்ள பகையை தெரிந்து கொள்கிறார். பின்பு நண்பனின் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

இயக்குனர் அனில் ரவி புடி ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு படமாக எடுக்க சிரமப்பட்டுள்ளார் என்பதை படத்தின் கட்சி அமைப்பில் காண முடிகிறது.  

மகேஷ் பாபு மற்றும் விஜயசாந்தியின் காட்சிகளில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த படம் ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்காக இருந்திருக்கலாம்.

ஆனால் இயக்குனர் கலகலப்பாக இருக்க வேண்டும் என ரஷ்மிகா மந்தனாவை கதையில் நுழைத்து சலிப்பை ஏற்படுத்தியுளளார். பிரகாஷ் ராஜ் வில்லன் கதாபாத்திரமும் அழுத்தமாக இல்லை, மொத்தத்தில் படம் சுமாரான படம் இவனுக்கு சரியான ஆள் இல்லை.


இவனுக்கு சரியான ஆள் இல்லை முழு படம் தமிழ் ராக்கர்ஸ் 


படம் ஏற்கனவே சுமாராக இருக்கிறது, இதில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இவனுக்கு சரியான ஆள் இல்லை முழு படத்தையும் பதிவிறக்கம் செய்ய இணையத்தில் கசியவிட்டது, படத்தை தமிழில் டப்பிங் செய்து  ரிலீஸ் செய்தவர்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.

அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏர்கனவே இந்த படத்தை பல லட்சம் பேர் பார்த்துள்ளதால்,  இவனுக்கு சரியான ஆள் இல்லை படத்திற்கு தியேட்டருக்கு கூட்டம் வருவது கடினம் தான்.


Latest Post