ads
ரேகா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்
விக்னேஷ் (Author) Published Date : Oct 18, 2020 22:59 ISTபொழுதுபோக்கு
நடிகை ரேகா இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் தொடங்கிய எலிமினேஷன் ரவுண்டில் மற்றவர்களை விட குறைந்த வாக்குகளையே பெற்றதால், வெளியேறினார்.
சமீப காலமாக தமிழ் படங்களில் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை, அழுத்தமான கதைகளிலும் நடிக்கவில்லை. இவர் சமீபத்தில் விஜய் டிவியில் பங்கேற்ற சமையல் நிகழ்ச்சியிலும் நல்ல பெயர் எடுக்கவில்லை.
இதுபோன்ற சில காரணங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழிச்சியின் கடந்த இரண்டு வாரங்களில் நடிகை ரேகா அழுத்தமான சம்பவங்களிலோ அல்லது, மக்களுக்கு பிடிக்கும் வகையில் பங்கேற்கவில்லை மேலும் இவரின் காட்சிகள் பெரிதும் இல்லை.
மக்கள் மத்தியில் பெரிதும் கவராத காரணத்தினால், நடிகை ரேகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய முதல் போட்டியாளர்.