ads

ராதே ஹிந்தி முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்ததில் ரசிகர்கள் ஆத்திரம்

ராதே ஹிந்தி படம்

ராதே ஹிந்தி படம்

சல்மான் கானின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ராதே ஹிந்தி முழு படம் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டெலிக்ராம் செயலியில் கசிந்துள்ளதாக தயாரிப்பாளர்களுக்கு தெரிவித்து, முடக்க வலியுறுத்தி வருகின்றனர்.

ராதே படம் ஜீ5 தளத்தில் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதிரடியாக உயர்தர பதிப்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள, இணையதளங்களில் முழு படத்தையும் கசியவிட்டுள்ளனர்.

தங்களது சூப்பர்ஸ்டாரின் படம் இணையத்தில் லீக் அநாதை கண்ட ரசிகர்கள், சமூக ஊடங்கங்கள் மூலம், படத்தின் நாயகன் சல்மான் கான் மற்றும் தயாரிப்பு குழுவிற்கும் திருத்தப்படுத்தி, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ராதே திரைப்படம் வலைத்தளங்களில் கசிந்தது, பலரும் இதை பகிரதொடங்கினார்கள். பல இணையத்தளங்களில் தான் கண்டுபிடித்ததாக ஒரு ரசிகர் தெரிவித்துஉள்ளர்.

மற்றொருவர் மொபைல் போனில் டெலிக்ராம் செயலி மூலம், படத்தின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து, "#ராதே அனைத்து சட்டவிரோத வலைத்தளம் மற்றும் டெலிக்ராம் ஆகியவற்றில் கசிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் இன்ஸ்டாகிராம் வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த படம் ஆன்லைனில் கசிந்த செய்தி வந்துள்ளது.

வீடியோவில், சல்மான் இந்தியில் பேசியது, "ஒரு படம் தயாரிக்கும் போது பலர் கடினமாக உழைக்கிறார்கள், சிலர் அதைப் பார்க்க இணையதளங்களை நாடும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நீங்கள் சரியான வழியில் ராதே படத்தை ரசிக்கிறீர்கள் என்று உங்கள் அனைவரிடமிருந்தும் ஒரு உறுதிப்பாட்டைக் கேட்கிறேன். இந்த ஈத் திருநாளில் பார்வையாளர்களின் அர்ப்பணிப்பைப் பற்றியதாக இருக்கும் - பொழுதுபோக்கில் திருட்டு இல்லை. " என்று கூறினார்.

பிரபு தேவா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், திஷா படானி, மேகா ஆகாஷ், ஜாக்கி ஷ்ராஃப், ஆகியோரும் நடிக்கின்றனர். வெடரன் என்கிற கொரியத் படத்தின் ரீமேக் இது.

கோவிட் -19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, படம் ஜீ5 OTT தளத்தில் தற்பொழுது ரிலீஸ் ஆகியுள்ளது, பின்னர் திரையரங்குகளிலும் வெளியிடப்படுகிறது என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

ராதே ஹிந்தி முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்ததில் ரசிகர்கள் ஆத்திரம்