ads

பொன்மகள் வந்தாள் படத்தால் சூரரை போற்று படத்திற்கு சிக்கல்

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

கொரோனா நோய் காரணத்தினால் உலகெங்கிலும் ஊரடங்கு நிலவி வருகிறது. இந்நிலையில் எந்த ஒரு பொழுதுபோக்கு இடங்கள் செயல்படவில்லை, இதில் குறிப்பாக தியேட்டர்களும் அடங்கும்.

ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர்கள் இயங்க அனுமதி கிடைக்க குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் என தெரிகிறது. மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆன படங்கள் ஐந்து நாட்கள் ஓடிய நிலையில், ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது, இது தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம்.

அதே போல் ஏற்கனவே ரிலீஸ் தேதிகளை அறிவித்த படங்களும் ரிலீஸ் ஆகாதலால், வட்டிக்கு பணம் வாங்கி இருக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை மற்றும், கடன் வாங்கி மாஸ்டர் படங்களை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கடன் சுமைகள் அதிகம்.

இவ்வாறு இருக்கும் இந்த சூழலில், நடிகர் சூர்யா சொந்தமாக தயாரித்த படம் தான் பொன்மகள் வந்தாள். இந்த படம் தற்பொழுது ரிலீஸ் ஆகும் நிலையில் உள்ளது, ஆனால் இதை இவர்கள் தீயேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடுகிறார்கள்.

இதை கேள்விப்பட்ட ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் பன்னீர் செல்வம், இது போன்ற செயல் முற்றிலும் விதிமுறை மீறல். தியேட்டருக்காக தயாரிக்கும் படங்கள், திரையரங்கில் ஓடிய பின்புதான் அமேசான் பிரைம், நெட் பிலிக்ஸ் விற்கப்படும்.

நடிகர் சூர்யா தரப்பில் தொடர்பு கொண்ட போதும் எந்த ஒரு முறையான தகவுள்கள் சொல்லாமல் இருப்பதால், இனி சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் இவரை சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம், என தெரிவித்து உள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தால் சூரரை போற்று படத்திற்கு சிக்கல்

இது போன்ற செயல்கள் தொடர்ந்தால், இனி தியேட்டர்களின் நிலைமை மோசமாகிவிடும் அதே சமயம் அமேசான் பிரைம் போன்ற நிறுவனங்கள் கண்டிப்பாக அதிக நஷ்டத்தை சந்திக்கும். காரணம், பொதுவாக புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன அன்றே தமிழ் ராக்கர்ஸ் தரமில்லாத திருட்டு பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய இணையத்தில் விடுவார்கள். நல்ல தரமான பதிப்புகளை பெற குறைந்தது ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்தால், மக்களுக்கு சில மணிநேரங்களில் உயர்தர பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் மூலமாக இலவசமாக கிடைக்கும். ஆரம்பத்தில் அமேசான் பிரைம் அதிக விலை கொடுத்து வாங்கினாலும், பிற்காலத்தில் இவர்கள் அதிக விலை கொடுக்க முடியாது. 

இதனால் மீண்டும் படங்கள் தியேட்டர்களுக்கு தான் வரும், தயாரிப்பாளர்கள் தியேட்டர்கள் மூலம் தான் நல்ல லாபம் பார்க்க முடியும், பின்பு எங்கு வேண்டும் என்றாலும் விற்கலாம். இல்லை என்றால் தயாரிப்பாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தற்காலிகமாக கிடைக்கும் அதிக விலை பிற்காலத்தில் கண்டிப்பாக கிடைக்காமல் போகும்.

பொன்மகள் வந்தாள் படத்தால் சூரரை போற்று படத்திற்கு சிக்கல்