ads

ஓ மை டாக்: நாய் கண்காட்சி, குழந்தைகளுக்கு பிடித்த படம்

ஓ மை டாக்

ஓ மை டாக்

குழந்தைகளுக்கு பிடித்த படமாக ஓ மை டாக் தமிழ் படம் இருக்கும். அருண் விஜய் தனது மனைவி மஹிமா நம்பியார், தந்தை விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வசிக்கும் நடுத்தர வர்க்க மனிதர்.

இதற்கிடையில், நாய் கண்காட்சியில் பல வெற்றிகளைப் பெற்ற வினய், பார்வையற்ற நாய்க்குட்டியை போட்டிக்கு பயனளிக்காது என்று தனது ஆட்களிடம் கூறுகிறார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நாய்க்குட்டி அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அர்னவ் நாய்க்குட்டிக்கு கண் அறுவை சிகிச்சை செய்து அதை வளர்க்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில், நாய் கண்காட்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பல சுற்றுகளில் முன்னேறும் அர்னவின் நாய் போட்டியில் கலந்து கொள்ள விடாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார்.

இறுதியில் நாய் கண்காட்சியில் அர்னவ்வின் நாய் வெற்றி பெற்றதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. பார்வையற்ற நாய் போட்டியில் கலந்து கொள்ளும் விதத்தை நல்ல கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சரோவ் சண்முகம். பெரியவர்களை விட குழந்தைகளை மனதில் வைத்து படத்தை இயக்கியுள்ளார்.

ஓ மை காட் படத்தில் நாயகனாக நடித்த அருண் விஜய் அப்பா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். விஜயகுமார், அர்னவ் ஆகியோருடன் கோபத்துடனும் பாசத்துடனும் நடிப்பில் மிளிர்கிறார்.

இருப்பினும், ஓ மை டாக் அர்னவ்க்கு முதல் படம் என்பதால் இவரின் நடிப்பில் சில இடங்களில் தடுமாறியிருக்கிறார் மேலும் சிரமங்களை உணரமுடிகிறது. அம்மாவாக மஹிமா நம்பியார் சிறப்பாக நடித்துள்ளார்.

அர்னவின் நண்பர்களாக நடித்துள்ள சிறுவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். படம் முழுவதும் நாய்கள் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன. ஸ்டைலிஷ் வில்லனாக வரும் வினய்யின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. வினய்யின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு வலுவில்லை.

பெரும்பாலான காட்சிகள் யூகிக்கக்கூடியவை, திரைக்கதை அழுத்தமாக இல்லை. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். அதேபோல் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஏற்ப ரசிக்க வைக்கிறது.

ஓ மை டாக்: நாய் கண்காட்சி, குழந்தைகளுக்கு பிடித்த படம்