நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்



இன்று ஓடிடி தளத்தில் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் முழு படமும் லீக் ஆனாது. 

ஆர். ஜே. பாலாஜி மற்றும் சரவணன் கூட்டணியாக இயக்கிய படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார் மேலும் இவருடன் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா நடித்துள்ளனர்.

தீபாவளி தினமான இன்று, சில படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆன போது, ஓடிடி தளத்தில் ரிலீஸான மூக்குத்தி அம்மன் முழுப் படத்தையும் ஆன்லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

இந்த வருடம் மார்ச் மாதம் இறுதி வரை தியேட்டர்களில் வெளியான புதிய படங்களை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், தற்பொழுது ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களையும் விட்டு வைக்கவில்லை.

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை மிக சுலபமாக ஹெச் டி தரத்தில் மட்டுமில்லாமல் 5.1 தொழில்நுட்பத்திலும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் வெளியிடுவது தயாரிப்பாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.  

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மூக்குத்தி அம்மன் படம், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்கிற்கு செல்லாமல், குடும்பத்துடன் வீட்டிலேயே பார்க்கலாம், இதற்காக மாதம் 299 செலுத்தினால், அந்த மாதத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் இலவசமாக பார்க்கலாம்.

ஆனால் மக்களில் சிலர், இதுபோன்ற எந்த ஒரு சந்தாவும் இல்லாமல், தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி மற்றும் சில இணையதளங்களில் இலவசமாக உயர்தர பதிப்பில் படங்களை டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்கிறார்கள்.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இந்தியாவில் இயங்காது, ஆனால் விபின் வசதியுடன் மக்கள் படங்களை பதிவிறக்கம் செய்கிறார்கள். மூக்குத்தி அம்மன் படத்தை மக்கள் அதிகாரபூர்வ தளங்களில் பார்த்தால், தயாரிப்பாளர்கள் பயனடைவது மட்டுமல்லாமல், மேலும் தரமான படங்களை எடுக்கவும் உதவும்.

Latest Post