நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தை ஒளிபரப்பு விரைவில், நெட்ஃபிக்ஸ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கான அமைப்பு ஆச்சரியமாக இருந்தது, புகைப்படம் எடுத்தல் பிரமிக்க வைக்கிறது. மேலும் இந்த திருமணத்தை இயக்குனர் கவுதம் மேனன் படமாக்கியதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்தை ஒளிபரப்பும் உரிமத்தை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ரூ. 25 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவன் பகிர்ந்ததால், அந்த வீடியோவை ஒளிபரப்ப நெட்ஃபிக்ஸ் மறுத்ததாக கூறப்பட்டது. இவர்களது திருமணத்தில் கலந்து கொண்ட முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படங்களை வெளியானது குறிப்பிடத்தக்கது..

 
இருப்பினும், நெட்ஃபிக்ஸ் இந்த அறிக்கையை மறுத்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் படங்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் நெட்ஃபிக்ஸ் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on:

Latest Post