ads

முதல் மனிதன் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

முதல் மனிதன் தமிழ் படம்

முதல் மனிதன் தமிழ் படம்

இன்று இயக்குநர் ராஜராஜதுரை இயக்கத்தில் தமிழ் நாடு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் முதல் மனிதன். இது ஒரு விழிபுணர்வு படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை, இருந்தும் தமிழ் ராக்கர்ஸ் இணயத்தில் முழு படத்தையும் பதிவிறக்கம் செய்துகொள்ள லீக் செய்துள்ளனர்.

படத்தை பற்றி ஈ டிவி வெளியிட்டுள்ள குறிப்பில், முதல் மனிதன் என்னும் திரைப்படம் சாதியையும் மதத்தையும் மனிதன் தான் உருவாக்கினான், கடவுள் உருவாக்கவில்லை என்பதை புதிய கோணத்தில், புதிதாக கூறியிருப்பதாக படத்தின் இயக்குநர் ராஜராஜதுரை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜராஜதுரை திரைக்கதை வசனம் எழுதி, புதுமுக நாயகன் பாசித்தை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் முதல் மனிதன். இதில் கதாநாயகிகளாக சான்ரா ரோஸ், ரோஷிணி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன் நடிகை கௌசல்யா, நடிகர்கள் ஆடுகளம் நரேன், மாரிமுத்து, கராத்தே ராஜா, சூப்பர் குட் லட்சுமணன்,போண்டா மணி, கிரேன் மனோகர், கொட்டாச்சி, கிங்காங் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து, இப்படத்துக்கு பாடல்கள் எழுத தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

முதல் மனிதன் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

முதல் மனிதன் படம் குறித்து படக்குழு கூறுகையில், 'தற்போது உலக நாடுகளில் நடக்கும் சாதிச் சண்டை மத வெறுப்பு பரப்புரை ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதன்முதலாக தோன்றிய மனிதன் என்ன சாதி? என்ன மதம்? அவர்கள் வழியில் வந்த நாம் என்ன சாதி? என்ன மதம்? என்று ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக அழுத்தமாக பதியும் படி முதல் மனிதன் படத்தில் கூறியுள்ளோம்.

சாதியையும் மதத்தையும் நாம் தான் உருவாக்கிக் கொண்டோம். கடவுள் உருவாக்கவில்லை என்பதை மிக அழகாக புதிய கோணத்தில், புதிதாக கூறியுள்ளோம்.மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் மனித நேயத்துடன் ஏற்றத் தாழ்வு இல்லாமல் வாழவேண்டும் என்பதே முதல் மனிதன் படத்தின் மையக்கரு. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது' என்றனர்.

இந்த தலைமுறை காலங்களில் மக்கள் படங்களில் கலகலப்பையும் அதிரடி சண்டை காட்சிகளை எதிர்பார்க்கும் இந்த சூழலில் இதுபோன்ற கதைகள் ஜெயிப்பது கடினமாக உள்ளது. இந்த நிலையில் பல்வேறு இணையதளங்கள் முதல் மனிதன் படத்தை சுலபமாக இணையதளங்களில் கசிய செய்துள்ளது, வேதனைக்குரியது.

முதல் மனிதன் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது