ads

மணி ஹீஸ்ட் சீசன் 5: 2021 செப்டம்பர் மாதம் முதல் நெட்பிளிக்ஸில்

மணி ஹீஸ்ட் சீசன் 5 தமிழ்

மணி ஹீஸ்ட் சீசன் 5 தமிழ்

மணி ஹீஸ்ட் நான்கு சீன்களை பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி, வரும் ஏப்ரல் மாதம் 2021 மணி ஹீஸ்ட் சீசன் 5 ரிலீஸ் ஆக உள்ளது.

மணி ஹீஸ்ட் சீசன் ரிலீஸ் தேதி மற்றும் வருடங்கள்

உலக மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட ஒரு கிரைம் வெப் சீரிஸ் தொடர் தான் மணி ஹீஸ்ட். இது ஆங்கில மொழி வெப் சீரிஸ் கிடையாது மேலும் இந்தியாவில் உள்ள மொழிகளில் மொழியாக்கம் செய்யவில்லை, இதனால் இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைக்கவில்லை.

நெட்பிளிக்ஸில் படங்களை பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே இருந்தது. இவர்கள் மட்டும் தான் மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் தொடரை ஆங்கிலத்தில் பார்த்தார்கள்.

கடந்த வருடம் கொரோனா லாக்டவுன் காரணமாக பல மாதங்கள் மக்கள் வீட்டினுள் இருந்தனர். இதன் காரணமாக அதிகம் பேர் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளங்களில் இருக்கும் படங்களை பார்க்க தொடங்கினார்கள்.

இதில் குறிப்பிடும்படி அதிகம் பார்வையாளர்கள் பார்த்த வெப் சீரிஸ் மணி ஹீஸ்ட். முதல் சீசன் ஸ்பானிஷ் மொழியில் இருந்ததால், ஆங்கில சப்டைட்டில் உதவியுடன் பார்த்தனர். மற்ற சீசன் 2, 3 மற்றும் சீசன் 4 ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதம் அனைத்து மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் சீசன் (1, 2, 3, 4) தொடர் தமிழில் மற்றும் மற்ற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தனர். கொரோனா லாக்டவுன் காலங்களில் வேறு மொழியில் பார்த்த அனைவரும் மீண்டும் தமிழில் கண்டு மகிழ்ந்தனர்.

மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் கதை

விறுவிறுப்பான ஒரு கிரைம் திரில்லர் கதை தான் மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ். ஒரு பெரிய வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டப்பட்டு, மிக தந்திரமாக செயல்படுத்தி, அடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள கொள்ளையர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெளியில் இருந்து உதுவுகிறார் கொள்ளையர்களின் தலைவன் ப்ரோபஸ்ஸர், .

படங்களில் வருவதை போல் இரண்டு மணிநேரத்தில் முடிவதில்லை, இயக்குனர் பொறுமையாக தான் நினைத்த அனைத்து காட்சிகளையும் மிக விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளார். 

தமிழ் இயக்குனர் செல்வராகவன் பல படங்களை பல மணி நேரத்தில் எடுத்து, அதை இரண்டரை மணிநேரத்தில் வைக்க வேண்டும் என்பதால், பல காட்சிகள் ஒரே நேர்கோட்டில் இருக்காது.

காரணம் வெப் சீரிஸ் தமிழ் மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. இவர் இயக்கிய "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை வெப் சீரிஸ் வடிவத்தில் எடுத்திருந்தால், இவரின் படைப்பு மிக சிறந்ததாக அமைந்திருக்கும். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்தில் பல இடங்களில் காட்சிகள் சீரமைப்பு, ரசிகர்களை குழப்பின.

இயக்குனர் செல்வராகவன் எடுக்கும் படங்களை வெப் சீரிஸ் முறையில் எடுத்தால், கண்டிப்பாக இவரின் முழுமையான கற்பனை திறன் மற்றும், இவர் சொல்ல நினைக்கும் காட்சிகளின் திரைக்கதையாக்கும் விதங்கள் பெரிய அளவில் பேசப்படும்.

மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் நான்கு சீசன்களையும் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் தற்பொழுது, மணி ஹீஸ்ட் சீசன் 5 பார்க்க தயாராக தொடங்கியுள்ளனர். பலரும் தங்களது சமூக பக்கங்களில் மணி ஹீஸ்ட் சீசன் 4, மீண்டும் ஒருமுறை பார்க்க தொடங்கியுள்ளது பதிவிட்டு உள்ளனர்.

மணி ஹீஸ்ட் சீசன் 5: 2021 செப்டம்பர் மாதம் முதல் நெட்பிளிக்ஸில்