ads

மாநாடு தமிழ் முழு படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில்

மாநாடு தமிழ் படம்

மாநாடு தமிழ் படம்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் டைம் லூப் த்ரில்லர் படம் மாநாடு. இதில் சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் நவம்பர் மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகி, வசூல் சாதனை படைத்தது. 

இந்நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி மாநாடு படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகா உள்ளது. பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியான இப்படம், கதை சொல்லப்பட்ட விதத்தால் வெற்றி பெற்றது. 

படத்தின் முன்னணி நடிகர்களான சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரின் அசத்தலான நடிப்பில் 

 மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தினால் படம் வெற்றியை உறுதி செய்தது.

திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் இப்போது படத்தை OTT தளத்தில் வெளியிடுகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கிய இந்தத் திரைப்படம், ஒரு காலச் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் முக்கிய நோக்கமான முதலமைச்சரை காப்பாற்றுவதை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், அஞ்சேனா கீர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மாநாடு தமிழ் முழு படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில்