ads

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் F9 தமிழ் முழு படம் திரையரங்கில் காணுங்கள்

பாஸ்ட் அண்ட் பியூரியஸ்

பாஸ்ட் அண்ட் பியூரியஸ்

ஆக்‌ஷன் ஸ்டார் வின் டீசல் மற்றும் இயக்குனர் ஜஸ்டின் லின் இணைந்து கலக்கும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படம் இன்று இந்தியாவில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஏற்கனேவே மற்ற மொழிகளில் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது.

20 வருடங்களாக வலுவாக சென்று கொண்டிருக்கிறது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் பாகங்கள். இந்த படத்தின் அதிசிறந்த காட்சிகள் என்றால்,  கண்மூடித்தனமான சறுக்கல்கள், மிதவைகள், பிரமிக்க வைக்கும் கார் சேசிங் காட்சிகள் தான்.

நீங்கள் எந்த ஒரு லாஜிக் பார்க்காமல் ஆக்‌ஷன் பட ரசிகர் என்றால், இந்த படம் உங்களை அணைத்து வகைகளிலும் ரசிக்க வைக்கும் ஒரு மசாலா ஆக்‌ஷன் படம் பாஸ்ட் அண்ட் பியூரியஸ்.

இருப்பினும், ஒரு வெற்றி படத்தை தொடர்ந்து கொடுப்பது மிக கடினம், மேலும் ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்திசெய்ய வேண்டும். வெற்றியின் அழுத்தம் ஒவ்வொரு திரைப்படத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதில் தற்பொழுது ரிலீஸ் ஆகியிருக்கும் F9 வேறுபட்டதல்ல.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் F9, அதிக சண்டை காட்சிகள், மிரளவைக்கும் கார் சேசிங் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து நீங்கள் இதில் லாஜிக்கை தேடாதீர்கள், முடிந்த வரையில் படத்தை ரசித்து பாருங்கள். 

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் F9 தமிழ் முழு படம் திரையரங்கில் காணுங்கள்