ads
எதற்கும் துணிந்தவன் மூவி தமிழ் ராக்கர்ஸ் லீக்
விக்னேஷ் (Author) Published Date : Mar 11, 2022 12:26 ISTபொழுதுபோக்கு
பல வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் மார்ச் 10 தேதியில் ரிலீஸ் ஆனது. படத்திற்கு பொதுவான ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்த ரசிகர்களிடம் விசாரித்தபோது, சுமாராக இருப்பதாகவும் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கும் அளவிற்கு இருக்கிறதாக தெரிவித்தனர். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் மூவி பல பதிப்புகளில் தமிழ் ராக்கர்ஸ் இணயத்தில் லீக் ஆகி உள்ளது. திருட்டு பாதிப்புகளை இணய வாசிகள் அதிகம் தேடுவது, படக்குழுவிற்கு வேதனையாக உள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு, சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படம் என எதிர்பார்த்த மக்களுக்கு இந்த படம் ஏமாற்றமே. பொள்ளாச்சியில் சில வருடத்திற்கு முன்பு ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம்.
எந்த ஒரு படமாக இருந்தாலும், தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பல இணையதளங்கள் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் ரிலீஸ் ஆன முதல் காட்சியில் இருந்தே முழு படத்தையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் லீக் செய்கிறார்கள்.
எதற்கும் துணிந்தவன் படம் ஒரு முழு கமர்ஷியல் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளது, முதல் பகுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை மற்றும் இரண்டாம் பகுதி, பார்க்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சூரி மற்றும் விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் புகழ், காமெடி என்ற பெயரில் மொக்கை அடித்துள்ளனர்.
தனது தங்கைக்கு நடந்த கொடூரமான சம்பவம் மற்றும், தனக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையை சூர்யா, வில்லனாக வரும் வினையை எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே கதை. பெண்களை ஆபாசமாக படம் எடுப்பது, இளைஞர்கள் பெண்களை காதல் வலையில் விழவைத்து ஆபாச படம் எடுத்து, இதனால் பெண்களுக்கு ஏற்படும் அவலங்களை படத்தில் காண்பித்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகளில் சூர்யா வழக்கம் போல் அசத்தியுள்ளார், ஒரு முறை படத்தை திரையரங்கில் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது. எதற்கும் துணிந்தவன் முழு படம் டவுன்லோட் செய்து பார்ப்பதற்கு பதிலாக, தியேட்டர்களில் பார்ப்பதனால் பல மனிதர்களின் உழைப்பிற்கு உதவலாம்.