ads
டோன்ட் லுக் அப் படத்தில் வரும் பாலியல் தொலைபேசி எண்
விக்னேஷ் (Author) Published Date : Jan 06, 2022 10:44 ISTபொழுதுபோக்கு
நெட்பிளிக்ஸில் ரிலீஸ் கடந்த வருடம் 2021 டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆன படம் டோன்ட் லுக் அப். இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில், உதவிக்காக என்று காண்பிக்கப்படும் தொலைபேசி எண், பாலியல் ஹாட்லைனுக்கு அழைத்துச் செல்லும் என்பதை ரசிகர்கள் கண்டுபிடுத்துள்ளனர்.
நட்சத்திரங்கள் நிறைந்த பேரழிவு நகைச்சுவை, லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் ஆகியோர் பூமியை அழிக்கும் ஒரு மாபெரும் வால் நட்சத்திரத்தை பற்றி உலகிற்கு எச்சரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர், இருப்பினும் உயர் பதவியில் இருக்கும் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.
பிறகு இவர்கள் மக்களுக்கு எப்படி இதை தெரிய படுத்தினார்கள் மற்றும் இறுதியில் பூமியை வால் நட்சத்திரம் தாக்கியதா, மனிதர்கள் என்ன ஆனார்கள் என்பதே கதை.
ஒரு காட்சியின் போது, டிகாப்ரியோவின் கதாபாத்திரம், ராண்டால் மிண்டி, ஒரு பொதுச் சேவை அறிவிப்பில் தோன்றுகிறார், அதில் அவர் அமெரிக்கர்கள் "மன அமைதியை" தேடினால் 1-800-532-4500 - என்ற தொலைபேசி எண்ணை அழைக்குமாறு அவர் வலியுறுத்துகிறார். ஒரு சிறுகோள் பூமியை நோக்கிச் தாக்க வருகிறது என்ற செய்தி.
"இப்போது, மில்லியன் கணக்கானவர்கள் நெருங்கி வரும் வால் நட்சத்திரத்தைப் பற்றி இதே போன்ற சந்தேகங்களையும் கேள்விகளையும் கொண்டிருக்கிறீர்கள்" என்று விஞ்ஞானி மிண்டி கூறுகிறார். “அதனால்தான், BASH Cellular, அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து, உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க, ஒரு புதிய ஹாட்லைனை இலவசமாக உருவாகியுள்ளது.
மக்கள் தங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ள மற்றும் வேறு எந்த உதவி என்றாலும், குறிப்பிட்ட எண்ணிற்கு அழைக்கும்படி திரையில் காண்பிக்கிறார்கள். இங்கு தான் படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த எண் உண்மையானதா என்பதைப் பார்க்க முடிவு செய்தனர், படத்தில் காண்பித்த எண்ணை அழைத்தால், அது தானியங்கி பாலியல் ஹாட்லைனை என்று கண்டுபிடுத்துள்ளனர்.
ரசிகர்கள் தெரிவித்த தானியங்கி செய்தி, ஒரு பெண் குரலில் இருந்து வந்த செய்தி கூறுகிறது: "அமெரிக்காவின் ஹாட்லைனுக்கு வரவேற்கிறோம். நண்பர்களே, சூடான பெண்கள் உங்களுடன் பேச காத்திருக்கிறார்கள். இப்போது ஒன்றை அழுத்தவும். பெண்களே, சுவாரசியமான மற்றும் உற்சாகமான தோழர்களுடன் இலவசமாகப் பேச, இப்போது இலவசமாக இணைக்க இரண்டை அழுத்தவும்.
இவ்வாறு கூறியதாக ஒரு பார்வையாளர் அந்த எண்ணை அழைத்தபோது என்ன நடந்தது என்பதைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.