ads
இயக்குனர் வெற்றிமாறன் பிறந்தநாள் வாழ்த்து: தாடிக்கார அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
விக்னேஷ் (Author) Published Date : Sep 05, 2020 15:25 ISTபொழுதுபோக்கு
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன், இவர் நடிகர் தனுஷின் ஆஸ்தான இயக்குனர் என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் பல வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதில் குறிப்பிடும் படங்கள், பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, சமீபத்தில் வெளியான அசுரன் படங்கள்.
பெரும்பாலும் படங்களை இவர் நடிகர் தனுஷை வைத்து தான் இயக்கியுள்ளார், அனைத்தும் மிக பெரிய வெற்றிப்படங்கள். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு, நகைச்சுவை நடிகர் சூரியின் வாழ்த்து இதுதான்.
வாழ்வியல் அறமாக நிற்பதில் வள்ளுவன் வழி... சுதந்திரத்தை, சுய மரியாதையை சொல்வதில் பெரியார் வழி... இயற்கையை போற்றுவதில் நம்மாழ்வார் வழி... மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்கார அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...