இயக்குனர் பாலா, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து
சேது படம் மூலம் தனது திறமையை நிரூபித்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இவர் சேது படத்திற்கு பின் நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.
இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால், இருவரும் சட்டபூர்வமாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இது இவரின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் பாலாவுக்கும் இவரின் மனைவி முத்துமலருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.