பிக் பாஸ் தமிழ்: எலிமினேட் ஆன ஆஜித், கடைசி நிமிடத்தில் தப்பித்தார்
பிக் பாஸ் வீட்டில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு ஏற்றார் போல், சுவாரஸ்யமான காட்சிகள் காண்பிக்க பட்டுவருகிறது.
பொதுவாக பிக் பாஸ் வீட்டை பொறுத்தவரையில் நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள், தங்களுக்கு அதிகம் வாக்குகள் பெறுவதற்கு அந்த வாரத்தில் அதிகம் தங்களை முன்னிறுத்தி கொள்வார்கள்.
அந்த வகையில் சனம் மற்றும் சுரேஷ் இருவருக்கும் அதிகம் சுவாரஸ்யமான காட்சிகள் மட்டுமில்லாமல் வன்முறை மற்றும் தடித்த வார்த்தைகளில் சண்டைகள் நடந்தது.
இதில் பெருமளவு காட்சியில் இடம் பெறாதது பாடகர் ஆஜித். விஜய் டிவி மூலம் பாடகராக வெற்றி பெற்ற இவர், போட்டியாளர்கள் மத்தியில் சிறுவயது போட்டியாளர்.
இந்த வாரம் அனைவரும் மக்களின் வாக்குகள் மூலம் காப்பாற்றப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகள் பெற்ற ஆஜித், இந்த வாரம் வெளியேற இருந்தார், ஆனால் ஆஜித் தப்பித்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த போட்டியில், ஆஜித் எவிக்ஷன் பிரீ ப்பாஸ் (Eviction Free Pass) வென்றார். இந்த Eviction Free Pass வைத்திருந்தால், எலிமினேட் செய்ய முடியாது, போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரலாம்.
இந்த வாரம் வெளியேற இருந்த ஆஜித் Eviction Free Pass மூலம் எலிமினேட் ஆகாமல் தப்பித்துக்கொண்டார்.