ads

பிக் பாஸ் தமிழ் வாட்சப் அட்மின் க்கு வந்த சோதனை

பிக் பாஸ் தமிழ் வாட்சப் அட்மின் க்கு வந்த சோதனை

பிக் பாஸ் தமிழ் வாட்சப் அட்மின் க்கு வந்த சோதனை

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வர இருக்கும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவரை, பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள் பட்டியல் குறித்த சரியான தகவல்களை யாராலும் வழங்க முடியவில்லை.

இப்போதெல்லாம், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பிக் பாஸ் ஆர்வத்தை தூண்டும்விதமாக வெவ்வேறு வீடியோக்களையும், புகைப்படங்களையும் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகின்றனர். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பார்வையாளர்களைக் ஊக்குவிக்கும் விதமாக, "இந்த 4 வது சீசனில் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்களாக யார் இருக்கப் போகிறார்கள் என்பதை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்றது."

போட்டியாளர்கள் யார், நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி என்ன என்பது குறித்து மக்கள் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த கட்டத்தில், விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ரசிகர்களுக்கு ஒரு புதிய பதிவை வெளியிட்டது.

இந்த பதிவில், இரண்டு நண்பர்கள் வாட்ஸ்அப் பக்கத்தில் பேசிக்கொள்வது. ஒருவர் மற்றவரிடம் பிக் பாஸ் நிகழிச்சியில் யார் யார் வரப்போகிறார்கள் என கேட்க, அதற்கு விஜய் டிவியில் பணிபுரியும் மற்ற நண்பன் சத்தியமா தெரியவில்லை என்று சொல்ல, இதை கேட்ட நண்பன் கோபமாக " நீ நிஜமாகவே விஜய் டிவியில் தான் வேலைபார்கிறாயா என்று கேட்கும் பதிவை விஜய் டிவி "விஜய் டிவி அட்மின் அட்மின்னுக்கு வந்த சோதனை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் வாட்சப் அட்மின் க்கு வந்த சோதனை