ads
பிக் பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை மாரடைப்பால் மரணம்
விக்னேஷ் (Author) Published Date : Dec 29, 2020 12:12 ISTபொழுதுபோக்கு
செய்தி தொகுப்பாளரான அனிதா சம்பத், தனது தூய தமிழ் உச்சரிப்பால் பலரையும் கவர்ந்தவர். சமீபத்தில் விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான "பிக் பாஸ் சீசன் 4" போட்டியாளராக கலந்துகொண்டு, தனது வாத திறமையால் 84 நாட்கள் தக்கப்பிடித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறைவான வாக்குகள் பெற்று போட்டியை விட்டு வெளியேறினார். மகிழ்ச்சியுடன் தனது குடும்பத்தை பார்க்க சென்றார் அனிதா சம்பத், போட்டியில் இருந்து வெளியேறுகிறோம் என்று எந்த வருத்தமும் இவரிடம் இல்லை.
இந்நிலையில், இன்று இவரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள செய்தி வந்துள்ளது. அனிதா சம்பத்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், இவர்கள் இதில் இருந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறோம்.