ads

பிக் பாஸ் தமிழ் 4 - கமலின் புதிய தோற்றம் மருதநாயகத்தை போல் உள்ளதா?

பிக் பாஸ் தமிழ் 4 - கமலின் புதிய தோற்றம் மருதநாயகத்தை போல் உள்ளதா?

பிக் பாஸ் தமிழ் 4 - கமலின் புதிய தோற்றம் மருதநாயகத்தை போல் உள்ளதா?

நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயார் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் 4 தமிழின் முதல் ப்ரோமோ வீடியோவிற்கான ஷூட்டிங் தொடங்கிவிட்டது. 

இந்த புகைப்படம் தான் நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தோற்றம். ரசிகர்கள் இந்த தோற்றத்தை பார்த்தவுடன், மருதநாயகம் தோற்றத்தில் இருப்பதாகவும், தனது கோபத்தை காண்பிக்க தயார் நிலையில் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் 4 - கமலின் புதிய தோற்றம் மருதநாயகத்தை போல் உள்ளதா?

இந்த முறை அதிக துணை நடிகர்களுடன் முதல் ப்ரோமோ வீடியோ எடுக்கும் எண்ணம் இல்லை, காரணம் கொரோனா தொற்று காரணத்தினால் எடுப்பது சாத்தியம் இல்லை மற்றும் அரசிடம் பல்வேறு அனுமதி பெறவேண்டும். ஆகையால் இந்த முறை கமல் மற்றுமே நடித்து வசனம் பேசும் முதல் ப்ரோமோ வர இருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களாக ஜூன் மாதத்தில் தொடங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, இந்த முறை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. மேலும் பல நடிகர் நடிகைகளின் பெயர்கள் போட்டியாளர்களின் பெயர் பட்டியலில் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வரவில்லை. இதில் சுனைனா மற்றும் ரம்யா பாண்டியனின் பெயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் தமிழ் 4 - கமலின் புதிய தோற்றம் மருதநாயகத்தை போல் உள்ளதா?