ads
பீஸ்ட் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோட் செய்ய லீக் செய்துள்ளது
விக்னேஷ் (Author) Published Date : Apr 13, 2022 10:46 ISTபொழுதுபோக்கு
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் இன்று வெளியான பீஸ்ட் திரைப்படம் காலை நான்கு மணி காட்சி முதல் ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் பீஸ்ட் தமிழ் முழு படத்தையும் இலவசமாக டவுன்லோட் செய்து பார்க்க பல எச்டி ப்ரிண்டில் லீக் செய்துள்ளனர்.
கடந்த வருடம் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது, ஒரு வருடத்திற்கு பிறகு விஜயின் பீஸ்ட் படம் வருவதால் மிகுந்த எதிர்பார்புடன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். படத்திற்கு திட்டமிட்டபடி ஐந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கியது.
பீஸ்ட் படத்தின் கதை யோகிபாபு நடிப்பில் வெளியான கூர்க்கா படத்தை போல் இருக்கிறது என்று டிரைலர் சொல்லிய நிலையில், படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வம் காட்டி வந்தனர்.
கூர்க்கா படத்தை போல் இல்லாமல், படத்தை புதிய முயற்சியில் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், ஆனால் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் கூறுகையில், எதிர்பார்த்த அளவிற்கு படம் திருப்தி படுத்தவில்லை என்று தெரிவித்தனர்.
பீஸ்ட் படத்தின் விமர்சனம் சுமாராக இருக்கிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில், பல இணையதளங்கள் படத்தை இணையத்தில் கசிய விட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படம் வெளியானதால், படத்தை அதிக செலவில் விளம்பர படுத்தியுள்ளனர். ஒரு பெரிய நிறுவனம் தயாரிப்பில் வெளியானாலும், சாதாரண மக்களுக்கு படத்தின் டிக்கெட்டின் விலை அதிகமாகவே இருக்கிறது.
டிக்கெட் விலை அதிகம் என்ற காரணத்தினால், பலர் படத்தை இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துள்ளனர். கூகிள் சேர்ச் அதிகம் தேடப்பட்ட வாக்கியங்கள், டவுன்லோட் பீஸ்ட் தமிழ் மூவி, பீஸ்ட் தமிழ் புல் மூவி ஆன்லைன் போன்றவற்றை மக்கள் அதிகம் தேடுகிறார்கள்.
என்ன தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற வெப்சைட்கள் பீஸ்ட் தமிழ் புல் மூவி டவுன்லோட் செய்வதற்கு ஆன்லைனில் கசியவிட்டிருந்தாலும், படத்தை திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அனுபவம் வராது. எனவே, படத்தை தியேட்டர்களில் கண்டு ரசியுங்கள்.