நடிகர் பிரசாந்த் கதாநாயகனாகவும் ,நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்து வெளியாக இருக்கும் படம் அந்தகன். படத்தை தியாகராஜன் இயக்குகிறார், முக்கிய வேடத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பிரசாந்த் படங்கள் வெற்றி படங்களாக இருந்த சமயத்தில், இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சிம்ரன். தற்பொழுது, பழைய காதலியுடன் இளமையாக நடிக்கிறார் டாப் ஸ்டார் பிரசாந்த்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அந்தகன் தமிழ் படத்தை உலகெங்கிலும் ரிலீஸ் செய்ய உள்ளதாக, செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்ததூண் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் வசூல் சாதனை செய்து மாஸ் ஹிட்டானதால், தனக்கு அந்தகன் படம் ஒரு திருப்பமாக இருக்கும் என மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

