ads

H-1B விசாவில் டிரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி மாற்றம்

H-1B விசாவில் டிரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி மாற்றம்

H-1B விசாவில் டிரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி மாற்றம்

அமெரிக்கா அதிபரான டிரம்ப் H-1B விசா விண்ணப்பக் கட்டணத்தை 100,000 டாலர் ஆக உயர்த்தியிருப்பது இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள குடியேற்றதாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்காவில் வேலைவாய்ப்பை நாடும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 21, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வு புதிதாக H-1B விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், அவர்களது விசாவின் காலக்கெடு முடியும் வரை இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. ஆனால், இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சத்திற்கு மேல் உள்ள இந்த கட்டணம், இந்திய இளைஞர்களின் அமெரிக்கக் கனவிற்கு ஒரு பெரிய தடையாக மாறும். அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சார்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும், ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு அதிகரிக்கும்.

டிரம்பின் இந்த முடிவு உள்நாட்டு வேலைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக அவரது நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் வேலையில்லாமல் உள்ள உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். எனினும், இந்தக் கட்டண உயர்வு அமெரிக்காவின் கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை ஈர்ப்பதை தடுக்கும் என பல தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

H-1B விசாவில் டிரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி மாற்றம்