ads

பிறந்த நாள் கொண்டாடும் பாரிஸ் அதிசயம்

ஈபிள் டவர் 130வது பிறந்தநாள்

ஈபிள் டவர் 130வது பிறந்தநாள்

பாரிஸ்  நகரம் ஈபிள் டவரின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாட உள்ளது.   130 ஆண்டுகால வரலாற்றை மீளாய்வு செய்யும் ஒரு விரிவான முயற்சியாக  இரவு லேசர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். 

முன்னதாக பகல் நேரத்தில் 1,300 குழந்தைகள் ஐயன் லேடி என்று அழைக்கப்படும்  கோபுரத்திற்கு கீழே  சிற்றுண்டி நேரத்தை களித்தனர். அந்தி சாய்ந்து இரவு நேரம் தொடங்கிய பின் லேசர் காட்சி நாளைய தினம் நடத்தப்படுகிறது. 12 நிமிடங்கள் இயக்கப்படும் இந்நிகழ்ச்சியில் டவரின் முகப்பருவில் ஒளிரும். லேசர் கானா தொழில்நுட்ப வேலைகளை ஏறுவத்தில் வல்லமை படைத்த தொழிலாளர்களை வைத்து கட்சிக்கு உண்டான பணிகளை செய்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் மக்கள் கோபுரத்தின் உச்சியை வரை சென்று வருகின்றனர் அதுமட்டுமின்றி குஸ்டாவ் ஈஃபெல் 1889ஆம் ஆண்டு இவ்வுலகத்திற்கு அழகான கட்டிடத்தை வடிவமைத்த அழகினையும் கண்டு ரசிக்கின்றனர். அந்த நேரத்தில் உலகின் மிக உயரமான நினைவுச்சின்னமாக இருந்தது, மற்றும் கடுமையான நகர்ப்புற திட்டமிடல் விதிகளால் இன்றும் பாரிஸ் வானலைக்கு மேலே உயர்ந்த கோபுரமாக உள்ளது. 

ஈபிள் டவர் முதன் முறையாக மே 15, 1889 அன்று உலகின் திறந்தவெளி விழாவிற்கு பல நாட்கள் கழித்து பொது மக்களுக்கு திறக்கப்பட்டது. டவர் 324 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. 7 வருடங்களுக்கு ஒருமுறை முழுமையாக டவர் வர்ணம் தீட்டப்படும்.  சுமாராக 60 டன் வர்ணம் உபயோகிக்கப்படும் மேலும் துரு பிடிப்பதில் இருந்து முழுமையாகவும் காக்கப்படுகிறது. பார்வையாளர்கள் வசதிக்காக 2 பெரிய உணவகங்கள் உருவாக்கி உள்ளது. 

கோபுரம் மூன்று நிலைகளை பார்வையாளர்களுக்காக கொண்டுள்ளது, முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் உணவகங்கள் உள்ளன.  உயர்மட்ட உயர மேடையில் 276 மீ (906 அடி) தரையில் மேலே உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் நிலை செல்ல சீட்டு வாங்கிக்கொண்டு மாடி படி அல்லது லிப்ட் மூலம் செல்லலாம். அதற்கு மேலே லிப்ட் மூலமே செல்ல முடியும். தரைமட்டத்திலிருந்து முதல் நிலை வரை ஏறக்குறைய 300 படிகள் உள்ளன. அதே நிலை படிகள் முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கு செல்வதற்கும் உள்ளன.

உலக அதிசயங்கள் மக்களுக்கு வியப்பு, மகிழ்ச்சி, குதூகலப்பு போன்ற பல்வேறு உணர்வுகளை தருகின்றது. அதனை பாதுக்கப்பதே மனுடர்களின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

பிறந்த நாள் கொண்டாடும் பாரிஸ் அதிசயம்