ads

இனி ஏடிஎம்மில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்

ஏடிஎம்மில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஸ்மார்ட்போன்கள் வந்ததில் இருந்து நமது பெரும்பாலான அன்றாட தேவைகள் அனைத்துமே கையடக்க ஸ்மார்ட்போன் மூலமே முடிந்து விடுகிறது. ஸ்மார்ட்போனை கொண்டு EB பில் கட்டுதல், பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல், ரீசார்ஜ் செய்தல் மற்றும் நமது தேவைக்கான உணவு பொருட்கள் முதல் காலில் போடும் செருப்பு வரையிலும் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் போன்றவற்றை வைத்து உட்கார்ந்த இடத்திலே முடித்து விடுகிறோம்.சிறு கையடக்க ஸ்மார்ட்போன் ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதுமே சீக்கிரமாக கழித்து விடுகிறது.

இனி ஏடிஎம்மில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்

அதற்கேற்ப ஸ்மார்ட்போன் செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புது புது செயலிகள் அறிமுகப்படுத்த பட்டாலும் இன்னும் ஏடிஎம் வாசலில் பணம் எடுப்பதற்கு டெபிட் கார்டை வைத்து மணிக்கணக்கில் நின்று கொண்டிருக்கிறோம். முன்னதாக ஏடிஎம் இல்லாமல் பணம் அனுப்ப மொபைல் பணப்பரிவர்த்தனை (IMT Transaction) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிறகு தற்போது மக்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியை (Cardless Cash Withdrawal) வங்கிகள் அறிமுகம் செய்துள்ளது.

இனி ஏடிஎம்மில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்

ஏர்டெல் நிறுவனமும் தங்களது பயனாளருக்கு கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர் மை ஏர்டெல் (My Airtel) செயலியை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். பிறகு IMT வசதி கொண்ட ஏடிஎம்மிற்கு சென்று மை ஏர்டெல் செயலி மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP -ஐ வைத்து எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம். ஆனால் இதன் மூலம் முதல் இரண்டு முறையை தவிர அடுத்த முறை பணம் எடுக்க முயன்றால் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இனி ஏடிஎம்மில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்

இனி ஏடிஎம்மில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்