ads

வாட்ஸ்அப் அதிர்ச்சி செய்திகளால் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

வாட்ஸ்அப் அதிர்ச்சி செய்திகளால் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

வாட்ஸ்அப் அதிர்ச்சி செய்திகளால் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

வாட்ஸ்அப்: நாளுக்குநாள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது, இந்த வளர்ச்சியில் நன்மைகளும் உண்டு அதே சமயம் தீமைகளும் உண்டு. தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சிகளில் ஒன்று இன்டர்நெட், இன்று நாடு முழுவதும் அதிவேக இன்டர்நெட் வசதிகள் கிடைக்கிறது. இதனால் மக்கள் எந்த ஒரு இடத்தில் இருந்து மற்ற நபருக்கு அதிவேக இன்டர்நெட் வசதிகள் மூலம் குறுஞ் செய்திகள் , புகை படங்கள் மற்றும் வீடியோக்களை சுலபமாக அனுப்ப முடியும்.

தொழில் சம்பந்தமாக இவ்வாறு அனுப்புவதால், தொழில் துறை அதிகளவில் வளர்ச்சியடைந்தது. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பெற்றோர்களுக்கு தொடர்புகொள்ள இந்த வசதி மிகவும் உதவியாக உள்ளது. இவ்வாறு நல்ல விசயங்களுக்கு பயன் தரும் தொழில்நுட்பங்கள் சில சமயங்களில் நமக்கு தெரியாமலே நம்மை ஆபத்தில் தள்ளுகிறது.

இன்று வாட்ஸ் ஆப் உபயோகிக்கும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு விசயங்களுக்கு உபயோகிக்கின்றனர், அதிலும் தமக்கு எந்த வகையான வீடியோக்கள் வந்தாலும் அதை தனது நண்பர்கள் மற்றும் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஷேர் செய்கிறார்கள். காமெடி வகை வீடியோக்கள் இருந்தால் பரவாயில்லை, சில வீடியோக்கள் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ள கொலை குற்ற வீடியோக்கள், கலவரங்கள்,வாகன விபத்துகள், தவறி விழுந்து உயிர்சேதம் ஏற்படும் வீடியோக்கள் மற்றும் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் ஷேர் செய்கிறார்கள்.

இந்த வகையான அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை பார்ப்பதனால்,நமது மனஅழுத்தம் அதிக அளவில் உயர்வதால் தேவை இல்லாத பயம் நம்மை தொற்றிக்கொண்டு, மனநிலை பாதிக்கும் அபாயமும் உண்டு. அதே சமயம், சில வன்முறைகள் அல்லது கொலை சம்பவ வீடியோக்களை பார்த்தால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதிலும் இரவு தூங்கும் முன் இதுபேன்ற வீடியோக்களை பார்ப்பதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது, தூங்குமுன் முடிந்தவரை மொபைல் உபயோகிப்பது தவிர்த்திட வேண்டும் என மருத்துவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அதிர்ச்சி செய்திகளால் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு